தங்கம் வென்ற கோமதி; தூங்குகிறதா எடப்பாடி பழனிசாமி அரசு?

ஆசிய தடகளப் போட்டியில் தமிழக வீராங்கனை கோமதி தங்கப் பதக்கம் வென்று இந்தியாவுக்கே பெருமை சேர்த்திருக்கிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்தனர். திமுக சார்பில் கோமதிக்கு 10 லட்சம் ரூபாயும், தமிழக காங்கிரஸ் சார்பாக 5 லட்சம் ரூபாயும் அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் ரோபோ சங்கர் 1 லட்சம் ரூபாய் கொடுத்திருக்கிறார். ஆனால் முதலில் ஊக்கத்தொகை வழங்க வேண்டிய தமிழக அரசாங்கம் உறங்கிக் கொண்டிருக்கிறது.


கத்தாரில் நடந்த ஆசிய தடகளப் போட்டியில் 800 மீ பிரிவில் கோமதி தங்கப் பதக்கம் வென்றார். தங்கப் பதக்கம் வென்ற கோமதி யாரென அவர் வரலாற்றை அலசியபோது அவர் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர், சரியான பேருந்து வசதி இல்லாத திருச்சி முடிகண்டம் பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. அதுமட்டுமல்லாது மைதான வசதி கூட இல்லாமல் 20 கிலோமீட்டார் தூரம் தினமும் பயிற்சி எடுக்க சென்றிருக்கிறார்.

கோமதியின் வெற்றி இந்த அரசாங்கம் விளையாட்டுத்துறையை எவ்வளவு மட்டமான இடத்தில் வைத்துள்ளது என்பதை எடுத்துரைத்திருக்கிறது. அதிகமான பணம் புலங்கும் கிரிக்கெட் மீது கவனம் செலுத்தும் அரசாங்கம், மற்ற விளையாட்டுகளை பெரிதாக கண்டுகொள்வதில்லை. இன்னும் இதுபோல் எத்தனை கோமதியை நாம் அடையாளம் காணாமல் இருக்கிறோம் என்பது தெரியவில்லை.

கோமதியின் வெற்றியை தமிழக மக்கள் கொண்டாடிக் கொண்டிருக்க, விமான நிலையத்தில் அவரை வரவேற்க கூட தமிழக அரசாங்கம் எதுவும் செய்யவில்லை. எதிர்கட்சியும் நடிகரும் ஊக்கத்தொகை அளிக்கையில், தமிழக அரசு தூங்கிக் கொண்டிருப்பது என்ன மாதிரியான நிலைப்பாடு என்பது புரியவில்லை.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.