நாடு திரும்புகிறார் கோட்டாபய ராஜபக்ஷ!!

கொலை குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டுள்ள பரபரப்பான சூழ்நிலையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர்   கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்பவுள்ளார்.
அவரை வரவேற்பதற்காக இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருமாறு விஜத்கம என்ற அமைப்பு ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மீது தமிழரான றோய் சமாதானம் என்பவர் சார்பாக சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான அமைப்பு மற்றும் அமெரிக்க சட்ட நிறுவனத்தால்  வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மகளான அஹிம்சா விக்ரமதுங்க, கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக அமெரிக்காவில் உள்ள நீதிமன்றம் ஒன்றில் வழக்கு தொடர்ந்துள்ளதாக கடந்த திங்கட்கிழமை தகவல்கள் வெளியாகின.

தமது தந்தை கொலை செய்யப்பட்டமையானது பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளருக்கு தெரிந்து மற்றும் ஆலோசனைக்கு அமைய இடம்பெற்றுள்ளதாக கூறி அவர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கோட்டாபய ராஜபக்ஷவை அடுத்த ஜனாதிபதி தேர்தலில் களமிறக்குவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது.

இதற்கு இரட்டை குடியுரிமை சிக்கல் இருப்பதால், அமெரிக்க குடியுரிமையை கோட்டா கைவிடுவது தொடர்பான பேச்சுக்களில் ஈடுபட்டு வந்ததாக தகவல்கள் வெளியாகின.

இவ்வாறான சூழ்நிலையில் அமெரிக்காவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்பவுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.