நாட்டில் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்!!
வன்முறைச் சம்பவங்களை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரும் செயற்பாடுகளின் போது, மனித உரிமைகளை மீறாத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மனித உரிமை ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
பொலிஸ் திணைக்களத்துக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அனுப்பிய கடிதத்திலேயே ஆணைக்குழு இதனை குறிப்பிட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
“நாட்டில் ஏற்பட்டுள்ள வன்முறைச் சம்பவங்கள் மற்றும் குழப்பநிலை ஆகியவற்றினால் ஏற்படக்கூடிய மனித உரிமை மீறல்களை தவிர்ப்பது எமது கடமையாகும்.
மேலும் வன்முறை சம்பங்களை தடுப்பதற்கான சட்டத்தின் அதிகாரமிக்க நிறுவனமாக பொலிஸ் திணைக்களம் திகழ்கின்றது
ஆகையால் இவ்விடயத்தில் பொலிஸ் திணைக்களமும் கவனம் செலுத்துமென எதிர்பார்க்கின்றோம்.
இதேவேளை அனைத்து இன மக்களுக்கும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையிலேயே தங்களது செயற்பாடுகளை அரசு மற்றும் பாதுகாப்பு தரப்புகள் மேற்கொள்ள வேண்டும்.
அந்தவகையில் அதற்கு தேவையான உதவிகளை வழங்க மனித உரிமை ஆணைக்குழு தயாராகவுள்ளது” என அக்கடிதத்தில் மனித உரிமை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

.jpeg
)





கருத்துகள் இல்லை