திருகோணமலையில் அநாதரவாக நிறுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளினால் பதற்றம்!
திருகோணமலை நீதிமன்ற வீதியில் இன்று (திங்கட்கிழமை) காலை முதல் அநாதரவாக நிறுத்தப்பட்டுள்ள மோட்டார் சைக்கிளினால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை தொடர்ந்து நிலவி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்விடயம் குறித்து அப்பகுதியிலுள்ள பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள பொலிஸார் மற்றும் குண்டையை செயலிழக்கச் செய்யும் பிரிவிரினர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவத்தினால் அப்பகுதியில் தொடர்ந்தும் பதற்றமான சூழ்நிலை காணப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
.jpeg
)





கருத்துகள் இல்லை