யப்பானிய மின்சக்தி அமைச்சர் 20 நிமிடம் குனிந்து நின்று மக்களிடம் மன்னிப்பு கோரினார்!!

ஆனால் இலங்கையில் 8 இடத்தில் குண்டு வெடித்து 300க்கு மேற்பட்டோர் இறந்துள்ளனர். ஒரு அமைச்சர்கூட மக்களை பாதுகாக்க தவறியமைக்காக மன்னிப்பு கோரவில்லை. இதில் கொடுமை என்னவென்றால் சில அமைச்சர்கள் தமக்கு இப்படி குண்டு வெடிக்கப்போகிறது என்று முன்கூட்டியே தெரியும் என்று கொஞ்சம்கூட வெட்கம் இன்றி கூறுகிறார்கள் இவர்கள் இதை பொலிசாரிடம் கூறாவிட்டாலும் மக்களிடம் கூறியிருந்தால் மக்களும் தப்பியிருப்பார்களே. இலங்கை சட்டத்தின்படி இப்படியான விடயங்களை தெரிந்து அதை பொலிசாருக்கு தெரிவிக்கவில்லையென்றாலும் குற்றம்தான். அதற்கு குறைந்தது 7 வருட தண்டனை வழங்கலாம். இந்த சட்டத்தின்படியே பல அப்பாவி தமிழ் இளைஞர்கள் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்றால் இந்த அமைச்சர்களும் தண்டிக்கப்படுவார்களா? இதில் இன்னும் வேதனை என்னவென்றால் நாலு நாட்களுக்கு முன்னர் இந்திய உளவு நிறுவனம் இது தொடர்பாக ஜனாதிபதிக்கு தெரிவித்ததாகவும் ஆனால் ஜனாதிபதி தனக்கு தெரிவிக்கவில்லை என்று பிரதமர் ரணில் கூறி தப்பிக்க பார்க்கிறார். இதைவிட ஆச்சரியம் என்னவெனில் இந்தியாவில் குண்டு வெடிப்பது இந்திய உளவுப்படைக்கு தெரிவதில்லை. ஆனால் இலங்கையில் குண்டு வெடிப்பது மட்டும் அவர்களுக்கு எப்படியோ தெரிந்து விடுகிறது. அதுமட்டுமல்ல, குண்டு வெடித்தவுடன் இதற்கு 150 டன் வெடி மருந்து பாவிக்கப்பட்டது என்றும் இந்திய பத்திரிகைகளுக்கு தெரிந்திருக்கிறது. சம்பவம் நடைபெற்று 50 மணித்தியாலங்களின் பின்னரே ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு உரிமை கோரியுள்ளது. ஆனால் சம்பவம் நடந்தவுடனே இது ஐஎஸ்ஐஎஸ் அமைப்புதான் செய்தது என்று இந்திய தரப்பு கூறத் தொடங்கிவிட்டது . இப்போது பிரச்சனை என்னவென்றால் இச் சம்பவங்கள் தொடர்பான உண்மை விபரங்கள் மக்களுக்கு தெரிவிக்கப்படுமா என்பது சந்தேகமாக உள்ளது. ஏனெனில் ஜனாதிபதியை இந்திய உளவு நிறுவனம் கொலை செய்ய முயற்சி செய்த விடயமே அமுக்கப்பட்டு விட்டது. சரி இப்போது எமது கேள்வி என்னவெனில் , இந்த சம்பவத்தை விசாரிக்க அமெரிக்க இந்திய மற்றும் இஸ்ரேலிய உளவு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல இண்டர்போல் நிறுவனமும் வருகை தருகிறது. முள்ளிவாய்க்காலில் நடந்த இனப்படுகொலையை விசாரிக்க சர்வதேச விசாரணையை அனுமதிக்க முடியாது என்றவர்கள், சர்வதேச நீதிபதியை நியமிக்க அரசியல்அமைப்பு சட்டத்தில் இடமில்லை என்றவர்கள் இப்போது எப்படி அதுவும் உளவு நிறுவனங்களை விசாரணைக்கு அனுமதிக்கின்றனர்? ஐஎஸ்ஐஏஸ் ஆபத்து எனக் காரணம் காட்டி இனி விமான நிலையங்கள் துறைமுகங்கள் எல்லாம் அமெரிக்க மற்றும் இந்திய உளவு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் விடப் போகின்றார்கள். கடவுச்சீட்டு மற்றும் விசா அனுமதி எல்லாம் இனி இவ் உளவு நிறுவனங்களே கண்காணிக்கப் போகின்றன. பொதுவாக நாடு இவ்வாறு விற்கப்படுகின்ற நிலைமை வரும்போது ஜேவிபி தான் மிகப்பெரிய எதிர்ப்பை காட்டும். அவசரகாலச்சட்டத்திற்கு எதிராகவும் அவர்களே எதிர்ப்பு காட்டி வந்தனர். இனி அவர்களும் எதிர்ப்பு காட்ட முடியாத நிலையை உருவாகியுள்ளது. அவர்களது கட்சியின் சார்பாக தேர்தலில் போட்டியிட்ட முஸ்லிம் நபர் ஒருவர் இக் குண்டு வெடிப்பு சம்பவத்தில் சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இதனால் பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்ற நிலை ஜே.விபிக்கு. என்ன சட்டத்தையும் அமுல்படுத்து எந்த நாட்டு உளவுப்படையையும் அனுமதி. ஆனால் எங்களை இதில் சம்பந்தப்படுத்திவிடாதே என்று புலம்ப வேண்டிய நிலையில்தான் ஜேவிபி வந்துவிட்டது. ஒருபுறம் குண்டு வெடிப்பை காரணம்காட்டி முஸ்லிம் மக்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். மறுபுறம் குண்டுவெடிப்பை காரணம் காட்டி இந்நிய அமெரிக்க உளவுப்படைகளுக்கு நாட்டை திறந்து விடுகிறார்கள். இவற்றுக்கு எதிராக போராடுவதற்கு சிங்கள மக்கள் மத்தியில் பலமான எந்தவொரு அமைப்பும் தயாராக இல்லை. எனவே இந்த பாரிய பொறுப்பு தமிழ் மக்கள் மீதே சுமத்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக புலம்பெயர் தமிழர்களே இந்த பணியை முன்னெடுக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள். மக்கள் மீது யுத்தம் திணிக்கப்பட்டால் மக்கள் அதை தமது விடுதலைக்கான புரட்சிகர யுத்தமாக மாற்றுவார்கள் என மாசேதுங் கூறினார். எனவே அதேபோல் இலங்கை அரசு இந்திய அமெரிக்கவுக்கு நாட்டை விற்று மக்களை அடிமைப்படுத்த குண்டு வெடிப்பகளை பயன்படுத்தினால் மக்கள் அதற்கெதிராக ஒற்றுமையாக திரண்டு போராடுவார்கள். குறிப்பு- கடந்த வாரம்தான் மன்னார் எண்ணெய் கிணறுகள் தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. இந்தவாரம் குண்டு வெடித்துவிட்டது. கடந்தவாரம்தான் கடல் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்யுமாறு இந்தியா இலங்கையிடம் கேட்டது. இந்த வாரம் குண்டு வெடித்து விட்டது. சீனாவை கண்காணிக்க தனக்கு திருகோணமலை துறைமுகத்தை தரும்படி அமெரிக்க கேட்டது. இலங்கை தயங்கியது. இந்த வாரம் குண்டு வெடித்துவிட்டது. இனி எந்த எதிர்ப்பும் இன்றி இலங்கையில் இந்திய அமெரிக்க விருப்பங்கள் நிறைவேற்றப்படும். இப்போது நம்புங்கள் ஐஎஸஐஎஸ் அமைப்பு முஸ்லிம் மக்களுக்காகத்தான் குண்டு வைத்தது என்று. Balan Chandran

No comments

Powered by Blogger.