கல்முனை பகுதியின் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது!
கல்முனை, சம்மாந்துறை, சவளக்கடை ஆகிய பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் (ஞாயிற்றுக்கிழமை) காலை 8மணியுடன் தளர்த்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
குறித்த பகுதிகளுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிமுதல் மறுஅறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்து.
ஆனால் நாடளாவிய ரீதியில் ஒவ்வொரு நாளும் அமுல்படுத்தப்பட்டு வந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் ஏனைய பகுதிகளில் நேற்று தளர்த்தப்பட்டிருந்தது.
கல்முனை, சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 15ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் ஆறு ஆண்களும் மூன்று பெண்களும் ஆறு சிறுவர்களும் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 4 தீவிரவாதிகள் உள்ளடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் தொடர்ச்சியாக பதற்றமான நிலைமை காணப்பட்டமையினால் கடந்த வெள்ளிக்கிழமை முதல் நேற்று காலை 10 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு, தளர்த்தப்பட்டது. பின்னர் மீண்டும் மாலை 5 மணிமுதல் இன்று காலை 8 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

.jpeg
)





கருத்துகள் இல்லை