பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு கொமாண்டோ பாதுகாப்பு!


பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு கொமாண்டோ பாதுகாப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. கிறிஸ்தவர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களை தொடர்ந்து  சமய வழிபாட்டுத் தலங்கள் அனைத்திலும்  பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நாடளாவிய ரீதியில் பொலிஸார் நடத்தும் தேடுதல் சுற்றிவளைப்பில் அதிகளவான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் பலர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையிலேயே பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்  ஆண்டகைக்கு பாதுகாப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை நாட்டில் பல்வேறு பகுதிகளில் இடம்பெறும் சில அசம்பாவித சம்பங்களினால் அனைத்தும் மக்களிடத்திலும் பதற்றமான நிலைமை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.