கதாநாயகன் இல்லாத படத்தில் கஸ்தூரி!!

நடிகை கஸ்தூரி சர்ச்சைக்கு பெயர் போனவர். இவர் அடுத்து நடிக்கும் படம் நளினகாந்தி. கதாநாயகன் இல்லாத இந்த படத்தில் வ.ஐ.ச.ஜெயபாலன், புவிஷா இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். புவிஷா சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் தீபிகா படுகோனேவுக்கு உறவுப்பெண்ணாக நடித்தவர். படம் பற்றி இயக்குனர் பொன்.சுகீர் கூறியதாவது: ஜெயபாலன் ஒரு அறுவை சிகிச்சை மருத்துவர். அவர் மனநோய்க்கு ஆளாகிறார். அவரிடம் பணிபுரியும் நர்சான புவிஷா, அவரிடம் சிகிச்சை எடுத்துக்கொண்ட கஸ்தூரி இருவரும் அவரை எப்படி மனநோயில் இருந்து மீட்டெடுக்கிறார்கள் என்பதே கதை. நளினகாந்தி என்பது ஒரு ராகத்தின் பெயர். இது மனநோயில் இருந்து மீட்கும் சக்தி கொண்டது என்பதால் இதையே தலைப்பாக வைத்தோம். சராசரி கதைக்களம் என்ற நிறுவனம் தயாரிக்க ஜூட் ஆரோகணம் இசையமைக்கிறார்’. 

No comments

Powered by Blogger.