அமலாபாலின் காதல் பதிவு!

அமலாபால் விவாகரத்துக்கு பின் நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். ராட்சசன் படத்தில் விஷ்ணு விஷால் ஜோடியாக நடித்தபோது அமலாவுக்கும், விஷ்ணுவுக்கும் காதல் மலர்ந்திருப்பதாகவும் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.  அதை விஷ்ணு விஷால் உடனடியாக மறுத்து அறிக்கை வெளியிட்டார். அமலாபால் காதல் பற்றி கருத்து எதுவும் சொல்லாமல் நடிப்பிலேயே கவனமாக இருந்தார். படப்பிடிப்பில் விடுமுறை கிடைக்கும்போது எல்லாம் கவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பாகி வருகிறார்.  இந்நிலையில் கடற்கரை மணலில் தன்னுடைய காதலை வெளிப்படுத்தும் விதமாக சினேகம் என்று மலையாளத்தில் எழுதி அந்த படத்தை வெளியிட்டிருக்கிறார். அமலாபால் யாருக்கு காதல் சிக்னல் காட்டுகிறார் என ரசிகர்கள் வலைபோட்டு அமலாபால் காதலனை தேடிக்கொண்டிருக்கின்றனர்.
Powered by Blogger.