சற்று முன் மாங்குளத்தில் கோர விபத்து.(படங்கள்)

மாங்குளம்- பனிக்கன்குளம் பகுதியில் இன்று இரவு 8 மணியளவில் வீதியில் படுத்துறங்கியவர் மீது டிப்பர் வாகன் ஏறி விபத்துக்குள்ளாகியுள்ளது.

வவுனியாவிலிருந்து கிளிநொச்சி நோக்கி வந்து கொண்டிருந்த ரிப்பர் ரக வாகனம் ஏ ஒன்பது சாலையில் பனிக்கன்குளம் எனும் பகுதியில் படுத்திருந்தவரின் காலின் மேலால் ஏறியதில் இரண்டுகால்களும் சிதைவடைந்த நிலையில  குறித்தநபர் முதலுதவியின் பின்னர் அவசரப்பிரிவு அம்புலன்ஸ் மூலம் கிளிநொச்சி கொண்டுசெல்லப்படுகின்றார்.

35-40 வயது மதிக்கத்தக்க நபராகவிருந்தபோதிலும்   யார் என்று அடையளம் காணப்படவில்லை மதுபோதையில் வீதியினருகே படுத்திருந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது.

இந்நிலையில் வவுனியாவில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த டிப்பர் வாகனம் படுத்திருந்தவரின் கால்களில் ஏறியுள்ளது.

இதனால் இரு கால்களும் சிதைந்த நிலையில் வீதியால் சென்றவர்களால் மீட்கப்பட்ட குறித்த நபர் 1990 அம்புலன்ஸ் வண்டி மூலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Powered by Blogger.