மூத்த தளபதிகளில் பசீலன்ணாவின் தாயாரின் இறுதி நிகழ்வு!!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த தளபதிகளில் ஒருவராக விளங்கிய வன்னி மாவட்ட தளபதி மேஜர் பசீலன் அவர்களின் தாயார்05.04.2019 மாலை காலமாகினார். இன்று அன்னாரின் உடல் கிரிகைகள் இடம் பெற்று தகனம் செய்யப்பட்டது.


அன்னார் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு தனது மகனை உவந்தளித்த பெருமைமிகு தாயாக இவர் கருதப்படுகின்றார்

கடந்த இரண்டு ஆண்டுகளாக முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுச்சுடரை ஏற்றிய தாயார் சுகயீனமுற்றிருந்த நிலையில் நிலையில் இன்றைய தினம் இயற்கை எய்தியுள்ளார் இவரது பெருமை மிக்க சாதனைகளையும் சேவைகளையும் கௌரவிக்கும் முகமாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பானது மேஜர் பசீலன் அவர்களது ஞாபகமாக கனரக ஆயுதத்துக்கான எறிகணை ஒன்றினை பசீலன் 2000 என்ற பெயரில் அறிமுகப்படுத்தி பயன்படுத்தி வந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது .
Powered by Blogger.