யாழ் மாவட்ட மக்களுக்கு அவசர எச்சாிக்கை.!!

இலங்கையில் தொடா்ச்சியாக இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல்களை தொடா்ந்து யாழ்.மாவட்டத்தில் பாதுகாப்பு ஒழுங்குகளை செய்வதற்கான கலந்துரையாடல் இன்று யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.


ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு நடைபெற்ற இந்த கலந்துரையாடலின் நிறைவில் யாழ்.மாவட்ட செயலா் என்.வேதநாயகன் ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கையில்,

இலங்கையின் பல பாகங்களிலும் கடந்த 21 ஆம் திகதி தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றன.அந்த சம்பனத்தினால் பலர் உயிரிழந்ததுடன் ஏராளமானவர்கள் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவம் காரணமாக நாட்டின் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது.குறித்த வெடிப்பு சம்பவவங்களையடுத்து நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் நாம் மாவட்டத்தின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர்,பொலிசார்,பிரதேச செயலர்கள் போன்றவர்களை அழைத்து பேசினோம்.

குறிப்பாக எதிர்வரும் திங்கட்கிழமை பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.எனவே பாடசாலைகளின் பாதுகாப்புகள் தொடர்பாக ஆராயபட்டு வருகின்றன.

அத்துடன் யாழ் நகரில் இயங்கும் பிரபல தனியார் கல்வி நிறுவனங்களும் பாடசாலைகள் இயங்கும் வரை வகுப்புக்களை நிறுத்தி எமக்கு ஒத்துழைப்பு தரவேண்டும்.

மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் உங்கள் பகுதிகளில் சந்தேகத்திடத்துக்கமான நபர்கள் வந்தாலோ மர்ம பொருட்களை கண்டாலோ உடனடியாக அருகில் பாதுக்கப்பு தரப்பினருக்கோ

அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கோ அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.