மகாராஷ்டிராவில் 2 பெண் நக்சல் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

மகாராஷ்டிரா மாநிலத்தில், நக்சல் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப்படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் 2 பெண் நக்சல் தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி என்ற மாவட்டத்தில் உள்ள பாமரகாட் நகரில் தீவிரவாதிகள் உள்நுழைந்ததாக வந்த தகவலையடுத்து, பாதுகாப்புப்படையினர் அங்கு செனற்னர். தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில், 2 நக்சல் தீவிரவாதிகளை பாதுகாப்புப்படையினர் சுட்டுக்கொன்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சுட்டுக்கொல்லப்பட்ட இருவரும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
துப்பாக்கிச் சண்டையை அடுத்து, அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.