தர்பார் படப்பிடிப்பில் இணைந்த நயன்தாரா!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வந்த நிலையில், நயன்தாரா இன்று படப்பிடிப்பில் இணையவிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. படம் முழுக்க வரும் கேரக்டர் என்பதால் இந்த படத்துக்காக தொடர்ச்சியாக 60 நாட்கள் வரை நயன்தாரா கால்ஷீட் ஒதுக்கியுள்ளாராம்.  இதற்கு முன்பாக சந்திரமுகி, குசேலன் ஆகிய படங்களில் நயன்தாரா,  ரஜினியுடன் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினி இந்த படத்தில் இரண்டு வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் ரஜினியின் மகளாக நிவேதா தாமஸ் நடிக்கிறார். வில்லனாக இந்தி நடிகர் பிரதிக் பாபர் நடிப்பதாக கூறப்படுகிறது. மும்பையில் 3 மாதங்கள் தொடர்ச்சியாக தர்பார் படப்பிடிப்பு நடக்க உள்ளது.  அனிருத் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கும் இந்த படம் 2020 பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.