அனுமோல் மீது துல்கர் ரசிகர்கள் வருத்தம்!!

தமிழ் சினிமாவில் நடிக்கும் பல நடிகைகளுக்கு தமிழ் தெரியாது. பிற மாநிலங்களில் இருந்து வருவதால் வசனங்களை ஆங்கிலத்தில் எழுதி வைத்து மனப்பாடம் செய்து பேசுகின்றனர். ஆனால் சொந்த மொழிகூட ஒரு நடிகருக்கு தெரியவில்லை என்று புகார் கூறியிருக்கிறார் ஒரு நடிகை.  சத்யராஜ் நடித்த ஒரு நாள் இரவில் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் அனுமோல். இவர் மலையாளத்தில் ரஞ்சித் இயக்கிய ஞான் படத்தில் துல்கர் சல்மானுடன் நடித்தார். படப்பிடிப்பின்போது துல்கர் தனது வசனங்களை ஆங்கிலத்தில் எழுதி வைத்து பிறகு பேசி நடித்தார்.  அவர் இப்படி செய்ததற்கு காரணம் துல்கருக்கு மலையாளம் தெரியாது என்று அனுமோல் கூறியிருக்கிறார். மலையாள முன்னணி நடிகரான மம்மூட்டியின் மகன் துல்கருக்கே மலையாளம் தெரியாது என்று அனுமோல் கூறுவது வேடிக்கையாக இருப்பதாக ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
Powered by Blogger.