வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு கூட்டமைப்பு– ஜி.எல்.பீரிஸ்!!

வரவு செலவு திட்டத்தை நிறைவேற்றுவதற்கு கூட்டமைப்பு ஆதரவு வழங்கியமைக்காக அவர்களை குறைகூற முடியாது என பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் கி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.


மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் இந்த செயற்பாடு ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்று என தெரிவித்த அவர் வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளாமல்  சுதந்திரகட்சி விலகிக் கொண்டமை தொடர்பில்  பல சந்தேகங்கள் தோன்றியுள்ளன என்றும் கூறினார்.

பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “நடுத்தர மக்களின்  வாழ்க்கையில் ஏற்படும் பாதிப்புகளுக்கு  ஐக்கிய தேசிய கட்சியுடன் , சுதந்திர கட்சியும்  பொறுப்பு கூற வேண்டும். இவ்விடயத்தில் சுதந்திர  கட்சி ஒருபோதும் விடுபட முடியாது.

சுதந்திர கட்சியின் பொறுப்பற்ற செயற்பாட்டை தொடர்ந்து பரந்துப்பட்ட கூட்டணியமைத்தல் அவசியமற்றது என்று பொதுஜன பெரமுனவில் அங்கத்துவம் வகிக்கும்  அரசியல் கட்சிகளும்,  உறுப்பினர்களும் குறிப்பிடுகின்றார்கள்.

இவர்களின் கருத்துக்களும் நியாயமானதே.  இரண்டு தரப்பினருக்கும் இடையில் இதுவரையில் கொள்கை ரீதியில் ஒரு  இணக்கப்பாடு ஏற்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  இதற்கு பேச்சுவார்த்தையின் ஊடாக தீர்வு  காண முடியும்.

பரந்துப்பட்ட கூட்டணியமைத்தல் தொடர்பில் இரண்டு பேச்சுவார்த்தைகள் இதுரையில் திருப்திகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. மூன்றாவது பேச்சுவார்த்தை நாளைய மறுதினம்  இடம்பெறவுள்ளமை ஒரு சவால்மிக்கதாகும். ஆகேவே  சவால்களை வெற்றிக்கொண்டு  சிறந்த  முறையில்  பரந்துப்பட்ட கூட்டணி  அமைப்பதே  எமது நோக்கமாக காணப்படுகின்றது” என கூறினார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.