தமிழீழத் தேசியத் தலைவரின் மைத்துனன் கப்டன் அருண் அவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்!!


"தாய்மண் விடுதலைக்காக வீரவிதையான விடுதலைத் தீ"
     "கப்டன் அருண்" அன்பான பேச்சு,அனைவரிடமும் சுமூகமான தொடர்பைப் பேணும் நல் உள்ளம் தான் இந்த மாவீரனின் சிறப்பு.


தமிழீழ விடுதலைப் போராட்டம் துளிர்விடும் காலப்பகுதி 1986 ஆரம்ப காலம்.விடுதலைப் புலிகள் அமைப்பு பல நெருக்கடி களைச் சந்தித்த அந்த காலத்திலே தேசியத் தலைவரின் மணவாழ்க்கைத் துணைவியார் குடும்பம் போராட்டத்திற்கு ஆற்றிய பங்கு என்பது வார்த்தைகளால் சொல்லி வரலாறாக்கி விட முடியாது.

 இந்திய  இராணுவத்துடன்  கெரில்லா போர்முறையில் புளியம்பொக்கணை என்னும் இடத்தில்   ஏற்பட்ட  மோதலில்  இவர்  வீரச்சாவினை  தழுவியிருந்தார்.
தமிழீழத்தில் ஒட்டுக் குழுக்கள், மற்றும் நயவஞ்சகர்  போன்ற  ஒட்டுண்ணிகளால்  இவரைப்போன்று  பல  வீரமறவர்கள்  காட்டிக்கொடுக்கப்பட்டதை நாம் ஒருபோதும்  மறக்கவேமுடியாது.

     "பாலச்சந்திரன்"     இவரது இயற்பெயரே  தமிழீழத் தேசியத்                  தலைவர்  பிரபாகரனின்  கடைசி  புதல்வருக்கு  இவரது  நாமமே  சூட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தாயக மண் விடுதலைக்கான புனிதப் போரிலே இன்றைய நாளில் வீரச்சாவடைந்த அனைத்து மாவீரர்களுக்கும் எமது வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்வோம்.

"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"


No comments

Powered by Blogger.