அச்சுவேலியில் பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல்!!

அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் குடும்ப தகராறை விசாரிக்கச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கணவன் மனைவிக்கு இடையில் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு குறித்து, மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொள்ள பொலிஸ் உத்தியோகத்தர் முறைப்பாட்டாளரான பெண்ணின் வீட்டுக்குச் சென்றபோது குறித்த பெண்ணின் கணவன் பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளார். குறித்த தாக்குதலில் பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்ததுடன், அவரது சீருடையும் கிழிந்துள்ளது. அதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மேலதிக பொலிஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர். அங்கு வந்த பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டவரை கைது செய்ததுடன், தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தரை மீட்டு சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
Powered by Blogger.