சிங்கள புத்தாண்டில் மரம் நாட்டி சுற்றாடல் பாதுகாப்பை நிறைவேற்றுங்கள்!!

சிங்கள புத்தாண்டு தினத்தில் மரக்கன்று ஒன்றினை நாட்டி சுற்றாடல் பாதுகாப்பிற்கான பொறுப்பினை நிறைவேற்றுமாறு ஜனாதிபதி அவர்கள் சகல இலங்கையர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.

சுற்றாடல் பாதுகாப்பின் பெறுமதியை இன்று எமது நாடு மட்டுமன்றி முழு உலகமும் இனங் கண்டுள்ளதாக இன்று முற்பகல் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இடம்பெற்ற நாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய அபிவிருத்தி செயற்திட்டத்தின் நிறைவு வைபவத்தில் ரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன  இதனை தெரிவித்தார்.

ஆலோசனையிலும் வழிகாட்டலிலும் ஜனாதிபதி செயலகத்தினால் முன்னெடுக்கப்படும் தேசிய அபிவிருத்தி செயற்திட்டங்கள் மற்றும் பல்வேறு அமைச்சுக்களினால் முன்னெடுக்கப்படும் தேசிய அபிவிருத்தி செயற்திட்டங்களையும் சமூக நலன்புரி வேலைத்திட்டங்களையும் வினைத்திறனாகவும் பயனுறுதி வாய்ந்த முறையிலும் நடைமுறைப்படுத்தி கிராமிய மட்டம் முதல் மாவட்ட மட்டம் வரையில் மக்களுக்கு அதிகளவிலான சேவையையும் நன்மைகளையும் பெற்றுக்கொடுப்பதே “நாட்டுக்காக ஒன்றிணைவோம்” நிகழ்ச்சித்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.


அரச நிறுவனங்களினால் தீர்க்கப்பட வேண்டிய மக்கள் பிரச்சினைகளை கண்டறிந்து, அரச பொறிமுறையின் மூலம் உயர்ந்த வினைத்திறனுடன் அப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதும் இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.