புதுக்குடியிருப்பில் ஹெரோயின் விற்பனை செய்த பெண்ணும் வாங்கிய பெண்ணும் கைது!

முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு பகுதியில் ஹெரோயின் விற்பனை செய்த பெண்ணும், அதனை வாங்கிய பெண்ணும் புதுக்குடியிருப்பு பொலிஸாாினால் கைது செய்யப்பட்டுள்ளனா்.பொதி செய்­யப்­பட்ட ஹெரோ­ய்ன் விற்­பனை செய்­யப்­ப­டு­கின்­றது என்று நேற்­றுப் பொலி­ஸா­ருக்­குக் கிடைத்த தக­வ­லின் அடிப்­ப­டை­யில் சம்­பவ இடத்­துக்­குச் சென்று சந்­தே­க­ந­பர்­க­ளைக் கைது செய்­துள்­ள­னர்.

47பொதி­க­ளா­கப் பொதி செய்­யப்­பட்ட 2 கிராம் 360 மில்­லி­கி­ராம் ஹெரோ­யின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்­டது என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

ஹெரொ­யினை விற்ற குற்­றச்­சாட்­டில் கைது செய்­யப்­பட்ட பெண் யாழ்ப்­பா­ணம், சுன்­னா­கத்­தைச் சேர்ந்­த­வர் என்­றும், அதை வாங்­கிய குற்­றச்­சாட்­டில் கைது செய்­யப்­பட்­ட­வர் புத்­த­ளத்­தைச் சேர்ந்­த­வர் என்­றும் தெரிவிக்கப்­ப­டு­கின்­றது.

இந்­தச் சம்­ப­வம் தொடர்­பான மேல­திக விசா­ர­ணை­க­ளைப் பொலி­ஸார் முன்­னெ­டுத்து வரு­கின்­ற­னா்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Powered by Blogger.