உன்னால் முடியும்..!!

யார் இந்த சீமான்
ஒரு பெரும் கொடிய யுத்தத்தின்
பின்னர்
கலைந்து போன வண்ணங்கள்
மத்தியில்
தன் எண்ணங்களினால் எம்
மாவீரர்களின் தியாகங்களுக்கு
மகுடம் சூட்டி அழகு பார்த்தவர்!

விடுதலையோடு ஒட்டிக்கிடந்தவனெல்லாம்
தீட்டுப்பெண் போல் ஓரங்கட்டி
ஒதுங்கிக்கொள்ள
ஒற்றை மனிதனாய்
ஒற்றர்களின் தோலுரித்த
ஒப்பற்ற மனிதன்!

2009 இற்கு பின்
ஈழத்தின் பெயரையும்
தானைத்தலைவனின் பெயரையும்
உரைப்பது வீணென
ஊமையாய்ப் போன
ஊரவன் மத்தியில்
ஓர்மத்தோடு
உரிமைக்காய்
இன்றுவரை கருத்துப்போர்
புரியும்
தன்மானச் சிறுத்தை
செந்தமிழன் சீமான்!

விடுதலைக்காய்
நெறிபுரளாது குரலெடுப்பவனெல்லாம்
எதிரிகளின்
கடும் விமர்சனங்களெனும்
கத்திமுனைகொண்டு
வெட்டி சாய்கமுனைவது
யதார்த்தம்!

அப்படித்தான்
இவருக்கும்
ஈழவியாபாரி என்றும்
இனத்துவேசம் என்றும்
பத்து ஆண்டுகளாய்
பத்தவைத்தும்
செத்து வீழாத கருத்துப்போர்
ஈழத்து உரிமையின்
வடிகாலாகி
நதிகளோடு சங்கமித்து
நகர்கிறது!

இடம் பொருள் ஏவல்
பார்த்து
தடம் மாறிய தமிழர்கள் மத்தியில்
விடம் கொண்டவர் தீரத்தின்
தீயாகி!
அறம் கொண்டவரின் காப்பரணாகி!
நிறம் மாறாப் பண்பாளனாய்
வீரமுழக்கமிடும்
வீரத்தமிழச்சியின்
பிள்ளை இவன்!

யாருக்கும் தமிழ்மானத்தை
அடகு வைக்கா ஆணழகனாய்
பிரபாவெனும் பிரபஞ்சத்தை
தமிழகமெங்கணும் உயிர்ப்பித்த
கொற்றவர் பரம்பரையின்
வெளிச்சம் இவன்!

நீ தேர்தலில் தேர்வடைகின்றாயோ
இல்லையோ
ஈழத்தமிழனின் இதயத்தில்
அசைக்க முடியா உணர்வின் தீயாய்
அடிநெஞ்சில் ஆழப்பதிந்துள்ளாய்
விடியல் காணும் வரை உன்
துடியல் எம்மடிமைப்புத்திக்கு
எமனாய் எழட்டும்.

✍தூயவன்
Powered by Blogger.