ஒட்டு போடறதுக்கே இவ்வளவு போராட்டமா...! சிவகார்த்தி!!

நடிகர் சிவகார்த்திகேயன் கடும் போராட்டத்திற்கு பிறகு தனது வாக்கை செலுத்தியுள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்கினைச் செலுத்தி வருகின்றனர். மேலும் மக்களோடு மக்களாய் பிரபல நடிகர்கள் மற்றும் நடிகைகள் வாக்களித்து வருகின்றனர்.
அந்த வரிசையில் நடிகர் சிவகார்த்திகேயன் இன்று காலை 8 மணிக்கு வளசரவாக்கத்தில் உள்ள குட்ஷெப்பர்ட் பள்ளியில் வாக்களிப்பதாக தகவல் வெளியானது. ஆனால், அங்குள்ள பூத் எண் 303-ல் சிவகார்த்திகேயன் மனைவி கிருத்திகாவிற்கு மட்டுமே ஓட்டு இருந்தது. சிவகார்த்திகேயன் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை. இதனால் அவர் ஓட்டு போடவில்லை என்று கூறப்பட்டது. 
sivakarthikeyan
பின்னர் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயனிடம் கைரேகை மற்றும் கையெழுத்து பெற்றுக்கொண்டு, மதுரவாயல் சட்டமன்ற தொகுதியில் பாகம் 303 வாக்காளர் பட்டியலில் சிவகார்த்திகேயன் பெயர் எழுதப்பட்டு வாக்கு அளிக்கப்பட்டுள்ளது. நீக்கப்பட்ட பெயர் பட்டியலில் சிவகார்த்திகேயன் பெயர் இருந்ததால், இந்த சிறப்பு சலுகை அளிக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Powered by Blogger.