வேலூரில் நாங்கள் செலவு செய்த தொகையை திருப்பி தருவார்களா? சீமான் ஆவேசம்!!

மோடி ராகுல்  இருவரில் யார் வந்தாலும் எந்த மாற்றமும் நடைபெறாது  என்று நாம்  தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

vote
நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்கினைச் செலுத்தி வருகின்றனர். அதே போல் நடிகர்கள் அஜித், விஜய், ரஜினி, கமல் உள்ளிட்டவர்களும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முக ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட ஏராளமான அரசியல் பிரமுகர்களும் தங்கள் வாக்கினைப் பதிவு செய்தனர். 
seeman
அந்த வரிசையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், சீமான் சாலிகிராமத்தில் உள்ள சின்ன கரியப்பா பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்தார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், ' தேர்தல் ஆணையம் பொறுப்பில்லாமல் செயல்பட்டு வருகிறது. வேலூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்ததை ஏற்றுக்கொள்ளவே முடியாது. முறைகேடு செய்த வாக்காளரைத் தான் தகுதி நீக்கம் செய்திருக்க வேண்டுமே தவிர, தேர்தலை ரத்து செய்திருக்கக் கூடாது. நாங்கள் வேலூர் தொகுதியில் குறிப்பிட்ட தொகையை விடக் குறைவாகத் தான் செல்வது செய்தோம். ஆனாலும் அந்த தொகையைத் தேர்தல் ஆணையம் திருப்பி தருமா? என்றார்.
rahul
தொடர்ந்து பேசிய அவர்,  மோடி அல்லது ராகுல் யார் ஆட்சிக்கு வந்தாலும் எந்தவித மாற்றம் நடைபெறுவதில்ல. பொருளாதார கொள்கையில் மாற்றம் தேவை என்று குறிப்பிட்டார். 

Powered by Blogger.