தமிழர்களை அசாதாரண சூழ்நிலையைக்கி ஒடுக்க வேண்டாம்– ஸ்ரீதரன்!!

இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையைக் காரணமாகக் கொண்டு, வடக்கிலுள்ள தமிழர்களை ஒடுக்க முயல்வது ஆரோக்கியமான விடயமல்ல என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற சர்வமதக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “குண்டுத்தாக்குதல்களையடுத்து இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்நிலையில் மக்கள் அச்சமற்று செயற்பட வேண்டும்.

தேவாலயங்கள் மற்றும் மசூதிகளில் பூசைகளும் தொழுகைகளும் இடம்பெற வேண்டும். அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை மசூதிகளில் தொழுகைகள் இடம்பெற வேண்டும். அதற்கான ஒத்துழைப்புக்களை வழங்க அனைத்து மதத்தலைவர்களும் தயாராகவுள்ளதோடு நாமும் தயாராகவுள்ளோம்.

தென்னிலங்கையில் வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றதைக் காரணமாகக்கொண்டு வடக்கிலுள்ள தமிழர்களை ஒடுக்க முயல்வது ஏற்றுக்கொள்ள முடியாதவொன்றாகும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.