இலங்கை தொடர் குண்டுவெடிப்பு- தமிழக தவ்ஹீத் ஜமாத் விளக்கம்!!

தமிழகத்தில் இயங்கும் தவ்ஹீத் ஜமாத் அமைப்புக்கும், இலங்கையில் செயல்படும் தவ்ஹீத் ஜமாத் அமைப்புக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் துணைப் பொதுச்செயலாளர் அப்துல் ரஹீத் தெரிவித்துள்ளார். இலங்கை தலைநகர் கொழும்பு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் தேவாலயங்களை குறி வைத்து நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் சிக்கி இதுவரை 321 பேர் உயிரிழிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து நாட்டின் மசூதிகளில் நடந்த தாக்குதலுக்கு பழிவாங்கவே இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்கள் தாக்கப்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்றும், இலங்கையில் செயல்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத் இந்த தாக்குதலி செயல்படுத்தியுள்ளது எனவும் பாதுகாப்புத்துறை துணை அமைச்சர் ருவன் விஜேவர்தனே தெரிவித்தார். இதை தொடர்ந்து தவ்ஹீத் ஜமாத் அமைப்பு மீது கண்டனங்கள் எழுந்தன. இதுதொடர்பாக தமிழகத்தில் செயல்பட்டு வரும் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் நிர்வாகிகள் சென்னை பத்திரிக்கையாளர்கள் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.  அப்போது பேசிய அமைப்பின் துணைப் பொதுசெயலாளர் அப்துல் ரஹீம், இலங்கை குண்டு வெடிப்பில் என் டி ஜே எனும் அமைப்பின் மீது அந்நாட்டு அரசுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தற்கொலைப் படை தாக்குதல் என்பது இஸ்லாம் மார்க்கத்திற்கு எதிரானது. தமிழக தவ்ஹீத் ஜமாஆத் மற்றும் இலங்கையில் உள்ள ஸ்ரீலங்காவில் உள்ள தவ்ஹீத் ஜமாஅத் தொடர்புப்படுத்தி பேசுவது வருத்தமளிக்கிறது. இலங்கை எழுந்துள்ள குற்றச்சாட்டின் காரணமாக தமிழகத்தில் உள்ள தவ்ஹீத் ஜமாத் அமைப்பு மீது பலரும் அவதூறு பரப்புகின்றனர். இரு அமைப்புகளுக்கும் பெயரில் மட்டும் தான் தொடர்பு இருக்கிறது. நேரடியாக எங்களுக்கும் இலங்கை கிளைக்கும் தொடர்பில்லை என்று அவர் தெரிவித்தார். இந்நிலையில், இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக ராயட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் ராய்ட்டர்ஸின் தகவல், இந்த விவகாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

No comments

Powered by Blogger.