இலங்கையில் அதிகளவில் பலியான தமிழர்களுக்கும் இந்தியா உதவ வேண்டும்- வைகோ!!

இலங்கையில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் இருக்கும் தேவாலாயங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தமிழர்களும் பலியாகியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தியாவும், உலக சமுதாயமும் உதவ முன் வரவேண்டும் என்று மதிமுக தலைவர் வைகோ வேண்டுகோள் வைத்துள்ளார்.
இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்கள், ஆடம்பர ஹோட்டல்களை குறிவைத்து அடுத்தடுத்து 8 இடங்களில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் இதுவரை 310 பேர் உயிரிழந்துள்ளனர். இலங்கையை உலுக்கிய இந்த சம்பவத்துக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்தச் சூழலில், அங்கு குண்டுவெடிப்புக்காக பயன்படுத்த இருந்த 87 டெட்டனேட்டர்களும் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.
இதுகுறித்து இன்று பேட்டியளித்த மதிமுக தலைவர் வைகோ, ''இலங்கையில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் இருக்கும் தேவாலாயங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தமிழர்களும் அதிகளவில் பலியாகியுள்ளனர். குற்றம் செய்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தியாவும், உலக சமுதாயமும் உதவ முன் வரவேண்டும்'' என்று மதிமுக தலைவர் வைகோ வேண்டுகோள் வைத்துள்ளார். 
இலங்கையை உலுக்கிய தொடர் குண்டு வெடிப்புகளை அடுத்து அந்த நாட்டின் நாடாளுமன்றம் இன்று அவசரமாக கூடுகிறது.மேலும், நாடாளுமன்றத்தில் பயங்கரவாத தடுப்புச் சட்டம் இயற்றப்படுகிறது. பிரதமர் ரணில் விக்ரம் சிங்கே மற்றும் எதிர்கட்சித் தலைவர் உரை நிகழ்ந்தவுடன் பயங்கரவாத தடுப்புச் சட்டம் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படுகிறது. 
இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், சர்வதேச போலீஸ் அமைப்பான இண்டர்போல் குழு கொழும்பு விரைந்துள்ளது.
இலங்கையில் ஞாயிறன்று 3 தேவாலயங்கள், 4 நட்சத்திர விடுதிகள், ஒரு வீடு என 8 இடங்களில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதல்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 ஆக உயர்ந்துள்ளது. 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
6 இடங்களில் தற்கொலைப்படை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. குண்டுவெடிப்பு தொடர்பாக 55 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு 26 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. 
Powered by Blogger.