இலங்கையை கருத்துச் சுதந்திரம், திரைப்படங்கள் மூலம் உலகத்துடன் பகிர்ந்துகொள்ள முடியும் - அமெரிக்கத் தூதுவர்!!

“எமது கருத்துக்களை மற்றையவர்களுடன் பகிர்ந்துகொள்வதற்கு மிகவும் சக்திவாய்ந்த வழிகளாக கருத்துச் சுதந்திரம் மற்றும் திரைப்படங்கள் காணப்படுகின்றன. பாதுகாக்கும் பலமான மற்றும் வெளிப்படையான சட்டங்களால் இலங்கையின் விநியோகத்தைப் பாதுகாப்பதன் ஊடாக, இலங்கையின் படைப்பாற்றல் பொருளாதாரத்துக்கு வலுச் சேர்ப்பதையும், நியாயமான கொடுப்பனவுகள் வழங்கப்படுவதையும், இலங்கையின் கதைகளை உலகத்துடன் பகிர்ந்துகொள்வதையும் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்” என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா.பி.டெப்லிட்ஸ் தெரிவித்தார். இலங்கையின் நான்கு திரைப்பட நிபுணர்களுடன் அமெரிக்க நிபுணர்களும் இணைந்து இலங்கையின் திரைப்படத்துறை, கலைஞர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு நன்மையளிக்கும் வகையில் எவ்வாறு வினைத்திறனான திரைப்பட விநியோகத்தை மேற்கொள்வது என்பது தொடர்பிலான கலந்துரையாடல் நிகழ்வில் நான்கு இலங்கை திரைப்பட நிபுணர்களுடன் அமெரிக்க நிபுணர்களும் கலந்துகொண்டனர்.  இந்த கலந்துரையாடல் நிகழ்வு மார்ச் 30 ஆம் திகதி தொழில்முயற்சியாளர்களுக்கான இடமான ஹட்சில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமெரிக்கத் தூதுவர் அலெய்னா.பி.டெப்லிட்ஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  இதேவேளை, சுதந்திரமான திரைப்படத் தயாரிப்புக்கான அமெரிக்காவின் முன்னணி அமைப்பான திரைப்பட சுதந்திரம் அமைப்பின் பிரதிநிதியும் பொழுதுபோக்கிற்கான சட்டத்தரணியுமான மைக்கல் டொலாட்ஸன் மற்றும் குளோபல் மீடியா மேக்கர்ஸ் நிறுவனத்தின் சிரேஸ்ட நிகழ்சி  முகாமையாளர் ஷாரி பேஜ் ஆகியோர் திரைப்பட விநியோகம் என்பது கதைசொல்பவர்கள் பார்வையாளர்களை சென்றடைவதற்கு முக்கியமான ஊடகம் என்பதை வலியுறுத்தினர்.  யாழ்ப்பாணம், சர்வதேச திரைப்பட விழா பணிப்பாளர் அனோமா ராஜகருணாவினால் இந்நிகழ்ச்சி மதிப்பாய்வு செய்யப்பட்டதுடன், குழு விவாதத்தில் திரைப்படத் தயாரிப்பாளர் புத்தி கீர்த்திசேன, சிலோன் தியேட்டர்ஸ் பிரதிநிதி, ஸ்கோப் சினிமா தலைவர் நவீட் காதர் ஆகியோர் பங்கேற்றனர். குழு விவாதத்தின் பின்னர் பங்குபற்றுனர்கள் மற்றும் பார்வையாளர்கள் கொமன்ஸ் கபேயில் கலந்துரையாடல்களுக்காக இணைந்துகொண்டனர். திரைப்பட சுதந்திரம் என்பது திரைப்படங்களைத் தயாரிப்பது, பார்வையாளர்களை கட்டியெழுப்புவது மற்றும் திரைப்படத்துறையின் பன்முகத்தன்மையை ஏற்படுத்துவதற்கு உதவுவது போன்றவற்றை நோக்கமாகக் கொண்ட அரசசார்பற்ற நிறுவனமாகும்.  புலமைச் சொத்து உரிமை தொடர்பான சட்டத்தரணி டொனால்ட்சன் பரிசுபெற்ற நூலாசிரியர். புலமைச்சொத்து மற்றும் அனுமதி தொடர்பில் இவர் எழுதிய புத்தகங்கள் 50 ற்கும் அதிகமான திரைப்பட பாடசாலைகளில் பயன்படுத்தப்படுகின்றன.  திருமதி பேஜ், கோல்டன் குளோபல் விருதை வென்ற தொடரான “கலிபோர்னிகேஷன்” உட்பட பல்வேறு தயாரிப்புகளில் தயாரிப்பாளராகவும், நடிகர்களின் உதவியாளராகவும் கடந்த 27 வருடங்காளப் பணியாற்றியுள்ளார்.  குளோபல் மீடியா மேக்கர்ஸ் திட்டத்தின் ஒரு பகுதியாகவே திரு.டொனால்ட்சன் மற்றும் திருமதி பேஜ் ஆகியோர் இலங்கை வந்துள்ளனர். அமெரிக்க திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும், சர்வதேச சமூக விடயங்களை திரைப்படமாக்கும் துறைசார் நிபுணர்களுக்கும் இடையிலான கலாசாரப் பரிமாற்ற மற்றும் புத்தாக்க வழிகாட்டல் முயற்சியாக இத்திட்டம் அமைந்துள்ளது. திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் படைப்பாற்றல் உள்ளவர்கள் எதிர்கால நிகழ்ச்கிகள் மற்றும் அமெரிக்கத் தூதரகத்துடன் இணைந்த நிகழ்வுகள் பற்றிய தகவல்களை கொழும்பில் உள்ள அமெரிக்க நிலையத்துக்கு விஜயம் செய்து அல்லது தூதரகத்தின் சமூக ஊடகத் தொடர்புகளை பின்பற்றுவதன் மூலம் அறிந்துகொள்ளலாம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.