அரசாங்கத்துக்கு எம்மீது பயமும் தன்னம்பிக்கை உள்ளது-செல்வம் !

மாகாணசபைத் தேர்தலை தற்போது நடத்தினால் தங்களுக்கு வெற்றி பெற முடியாது என்ற பயத்தின் காரணமாக அரசாங்கம் தேர்தலை காலம் தாழ்த்திக் கொண்டிருக்கின்றது என தமிழ்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.  பல மாகாணங்களுக்கான ஆயுட் காலம் நிறைவடைந்து ஒரு வருடத்தையும் கடந்துள்ளது. சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு இது தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளதோடு, ஏனைய பல்வேறு அமைப்புக்களும் அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகித்துள்ளன.  அதிகாரப்பகிர்வு குறித்து பலராலும் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் வடக்கு உள்ளிட்ட பல மாகாணங்களுக்கான ஆயுட்காலம் நிறைவடைந்து, அவற்றின் அதிகாரங்கள் ஆளுனருக்கு கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இது தொடர்பில் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை குறித்து இவ்வாறு தெரிவித்துள்ளார்.  மாகாணசபைத் தேர்தலை தற்போது நடத்தினால் தங்களுக்கு வெற்றி பெற முடியாது என்ற பயத்தின் காரணமாக அரசாங்கம் தேர்தலை காலம் தாழ்த்திக் கொண்டிருக்கின்றது. பல மாகாணங்களுக்கான ஆயுட் காலம் நிறைவடைந்து ஒரு வருடத்தையும் கடந்துள்ளது. சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு இது தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளதோடு, ஏனைய பல்வேறு அமைப்புக்களும் அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகித்துள்ளன.  எனினும் தமது பயத்தின் காரணமாக அரசாங்கம் அவற்றை கவனத்தில் கொள்ளாது செயற்பட்டுக் கொண்டிருகின்றது. மாகாண சபைகளை இல்லாமலாக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்குக் கூட கிடையாது. அது அரசியல் சாசனத்தின் சட்ட வரையறைக்கு உட்பட்டதாகும். எனவே தேர்தலை காலம் தாழ்த்துவதன் நோக்கம் மாகாண சபைகளை இல்லாமலாக்குவதற்காக இருக்க முடியாது. 

No comments

Powered by Blogger.