தமிழ் மக்கள் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட வட்டுவாகலில் நீதி ஏக்க கண்காட்சி!!

..நீதி - ஏக்கம் - கண்ணீர் உத்தரிப்புக்களின் அல்பம் கண்காட்சி முன்னெடுக்கப்பட்டது. இவ் ஒளிப்படக் கண்காட்சியின் காண்பியல் 2 வட்டுவாகல் பாலம் முல்லைத்தீவில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5மணி வரை இடம்பெற்றது.
கடந்த இரண்டு வருடங்களாக வடக்கு, கிழக்கெங்கிலும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர் போராட்டங்களை நடத்திவருகின்றமை யாவரும் அறிந்ததே. அவர்களின் துயரத்தை ஒளிப்படங்கள் மூலம் ஆவணமாக்கிய ஊடகவியலாளர் கே.குமணன் முறைப்படுத்தப்பட்ட கண்காட்சியாக நடத்தினார்.
கருத்துகள் இல்லை