கொலொன்கொல்ல குளத்தை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு!!

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் எண்ணக்கருவின் பேரில் இலங்கை இராணுவத்தினரால் நடைமுறைப்படுத்தப்படும் “சிறிசர பிவிசும” 500 குளங்களை புனரமைக்கும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட பதவிய, சிறிபுர கொலொன்கொல்ல குளத்தை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் (06) இடம்பெற்றது.மேலும் வடக்கையும் தெற்கையும் இணைக்கும் இனங்களுக்கு மத்தியிலான நல்லிணக்க பொறிமுறைக்கு உயிரூட்டும் வகையில் நடைமுறைப்படுத்தப்படும் “நாட்டுக்காக ஒன்றிணைவோம்” நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மக்கள் மத்தியில் நல்லிணக்க எண்ணக்கருவை பிரபல்யப்படுத்தவும் அதன் அர்த்தத்தை மக்கள் மத்தியில் தொடர்ச்சியாக கொண்டு செல்லும் நோக்குடனும் புத்தாண்டு விழா ஒன்று இன்றைய தினம் கொலொன்கொல்ல குளக்கரை வளாகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்விலும் ஜனாதிபதி அவர்கள் கலந்துகொண்டார்.

மகாசங்கத்தினரின் பிரித் பாராயணத்திற்கு மத்தியில் நினைவுப்பலகையை திரைநீக்கம் செய்த ஜனாதிபதி அவர்கள், புனரமைக்கப்பட்ட கொலொன்கொல்ல குளத்தை மக்களிடம் கையளித்தார்.

அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி அவர்களினால் குளத்தில் புனித நீர் விடப்பட்டதுடன், மீன் குஞ்சுகளும் விடப்பட்டன.

இதன்போது ஆதிவாசிகளின் பாரம்பரிய நடன நிகழ்ச்சியொன்றும் இடம்பெற்றதுடன், அதிதிகளை கிராமிய வீடுகளுக்கு அழைத்துச் சென்று தேசிய கலாசாரத்திற்கேற்ப இனிப்பு பண்டங்களும் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி அவர்கள், ஆதிவாசிகளின் தலைவர் வன்னில எத்தோ, இராணுவ தளபதி, வன்னி கட்டளை தளபதி உள்ளிட்டோர் அங்கு கலந்துரையாடலில் ஈடுபட்டனர். தேசிய புத்தாண்டு நிகழ்வை முன்னிட்டு விளையாட்டுக்கள், பல்வேறு கலாசார நிகழ்வுகளும் இலங்கை இராணுவத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மரதன் ஓட்டப்போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு ஜனாதிபதி அவர்களினால் பரிசில்கள் வழங்கப்பட்டன.

ஆதிவாசிகளின் தலைவர் வன்னில எத்தோ மற்றும் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க உள்ளிட்ட இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்

No comments

Powered by Blogger.