வவுனியாவில் மோட்டார் சைக்கிளாலால் பரபரப்பு!!

வவுனியா குருமன்காட்டு பகுதியில் கடையொன்றின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்களினால் இன்று பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.


குருமன்காட்டுப்பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கடை மூடப்பட்டுள்ளதால் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும், இன்று காலை 6.30 மணியளவில் பொலிஸாருக்கு தகவலொன்று கிடைக்கப்பெற்றுள்ளது.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார், குறித்த மோட்டார் சைக்கிளினை சோதனையிட்டதுடன், மோட்டார் சைக்கிள் யாருடையது என அறிய விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதன்போது அருகில் உள்ள கடையில் பூட்டப்பட்டிருந்த சீ.சீ.ரி.வி கெமராவில் ஒருவர் மோட்டார் சைக்கிளினை நிறுத்திச்செல்வது பதிவாகியிருந்தது.

இதனையடுத்து விளம்பரப்பலகையில் காணப்பட்ட கடை உரிமையாளரின் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்ட பொலிஸார் அவரை உடனடியாக வருமாறு தெரிவித்தனர்.

குறித்த இடத்திற்கு சிறிது நேரத்தின் பின்னர் வருகை தந்த கடை உரிமையாளர் மோட்டார் சைக்கிள் தனக்கு தெரிந்த ஒருவருடையது எனவும், உரிமையாளர் மன்னாரில் உள்ள கல்வித்திணைக்களத்தில் பணியாற்றுபவர் எனவும், மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தனக்கு தொலைபேசியில் தெரிவித்து சென்றதாகவும் பொலிஸாருக்கு தெரிவித்துதள்ளார்.

இதனையடுத்து, பொலிஸார் கடை உரிமையாளருக்கு எச்சரித்துடன் அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.