வவுனியாவில் காணியை பௌத்த மடத்திற்கு தாரைவாா்த்துவிட்டு, உாிமையாளரை காட்டில் வாழவிட்ட பிரதேச செயலகம்!!

தனது காணியில் பௌத்தமடம் ஒன்றை அமைப்பதற்கு தனது அனுமதியை கேளாமல் வவுனியா வடக்கு பிரதேச செயலகம் அனுமதி கொடுத்துள்ளதாகவும், இதனால் தான் தற்போது காட்டு பகுதியில் வீடு ஒன்றை அமைத்துக் கொண்டு தங்கியிருப்பதாக காணி உாிமையாளா் குற்றஞ்சாட்டியுள்ளாா்.


வவு­னியா, கன­க­ரா­யன்­கு­ளம் பொலிஸ் நிலை­யத்­துக்கு அரு­கில் பௌத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த விகா­ரை­யின் பின்­பு­ற­மாக உள்ள காணி­யில், விகா­ரை­யைப் பரா­ம­ரிக்­கும் பிக்கு மற்­றும் சிலர் தங்­கு­வ­தற்கு இரு விடு­தி­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன.

தற்­போது இந்­தி­யா­வில் இருந்து நாடு திரும்­பி­யுள்ள பெண் ஒரு­வர் அந்­தக் காணி­க­ளுக்கு உரிமை கோருகின்றார். அந்த இரு விடு­தி­கள் அமைக்­கப்­பட்­டுள்ள 3 ஏக்­கர் காணி தனக்­குச் சொந்­த­மா­னது என்­றும், அந்­தக் காணி­யைத் துப்­பு­ர­வாக்­கச் சென்­ற­போது அரு­கில் நிலை கொண்­டுள்ள இரா­ணு­வத்­தி­னர் தடை­களை ஏற்­ப­டுத்­து­கின்­ற­னர் என்­றும் அந்­தப் பெண் கூறு­கின்­றார்.

“போரால் இடம்­பெ­யர்ந்து 2006ஆம் ஆண்டு குடும்­பத்­து­டன் இந்­தி­யா­வுக்­குச் சென்­றேன்.

2017ஆம் ஆண்டு நான் மீண்­டும் நாடு திரும்­பி­னேன். எனது காணி­யைப் பார்க்­கச் சென்­ற­போது அங்கு இரு கட்­ட­டங்­கள் அமைக்­கப்­பட்­டி­ருந்­தன. நான் எனது காணி­யைத் துப்­பு­ர­வாக்க முயன்­றேன். காணிக்கு அரு­கில் நிலை­கொண்­டுள்ள இரா­ணு­வத்­தி­னர் அதற்­குத் தடை­களை ஏற்­ப­டுத்­து­கின்­ற­னர்.

அச்­சு­றுத்­தும் வகை­யில் செயற்­ப­டு­கின்­ற­னர். தற்­போது எனக்கு வீட்­டுத் திட்­டம் கிடைத்­துள்­ளது. காணிப் பிரச்­சி­னை­யால் வீட்டை அமைக்க முடி­யா­துள்­ளது.

எனது காணிக்­குப் பின்­பு­ற­மாக உள்ள காணி ஒன்­றைத் தரு­கின்­றோம் என்று வவு­னியா வடக்­குப் பிர­தேச செய­லர் கூறு­கின்­றார். ஆனால் அங்கு வசிக்க முடி­யாது. அது காட்­டுப் பகு­தி­யாக உள்­ளது.”- என்று அந்­தப் பெண் தெரி­வித்­தார்.

இந்த விட­யம் தொடர்­பா­கப் பாதிக்­கப்­பட்ட பெண் மனித உரி­மை­கள் ஆணைக்­கு­ழு­வில் முறைப்­பாடு செய்திருந்­தார். அது தொடர்­பான விசா­ரணை நேற்­று­முன்­தி­னம் வவு­னி­யா­வில் நடை­பெற்­றது.

காணிக்கு அரு­கில் உள்ள இரா­ணுவ முகா­மின் பொறுப்­ப­தி­காரி, 56ஆவது படைப்­பி­ரி­வின் மக்­கள் தொடர்பாடல் அதி­காரி, பிர­தேச செய­லக அலு­வ­லர் ஆகி­யோர் ஆணைக்­கு­ழு­வால் விசா­ர­ணைக்­காக அழைக்­கப்­பட்­டி­ருந்­த­னர்.

எந்த அடிப்­ப­டை­யில் காணி விட­யத்­தில் நீங்­கள் தலை­யி­டு­கி­றீர்­கள்? என விசா­ரணை அதி­கா­ரி­க­ளால் இராணு­வத்­தி­ன­ரி­டம் கேள்வி எழுப்­பப்­பட்­டது.

தாம் அந்­தப் பெண்ணை அச்­சு­றுத்­த­வில்லை என்­றும், பிக்கு ஒரு­வர் விகாரை அமைந்த காணியை பராமரித்துத் தர­வேண்­டும் என்று கோரி­ய­மைக்கு அமையே அதைப் பரா­ம­ரித்­தோம்.

காணி தொடர்­பான அதி­கா­ரங்­கள் தமக்கு இல்­லா­த­தால் இந்த விட­யத்­தில் இருந்து முற்­றாக ஒதுக்­கிக் கொள்கின்­றோம் என்று இரா­ணு­வத்­தி­னர் தெரி­வித்­த­து­டன், அதை எழுத்து மூல­மும் தந்­த­னர் என்று மனித உரிமை ஆணைக்­குழு அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

இந்த விட­யம் தொடர்­பாக வவு­னியா வடக்­குப் பிர­தேச செய­லர் க.பரந்­தா­ம­னி­டம் கேட்­ட­போது, அந்­தக் காணிப் பிரச்­சினை தீர்க்­கப்­பட்­டுள்­ளது என்­றும், கட்­ட­டம் அமைக்­கப்­பட்­டுள்ள இடத்­துக்­குப் பின்­பு­ற­மாக அமைத்­துள்ள காணி பெண்­ணுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது என்­றும் பதி­ல­ளித்­தார்.

ஆனால் தனது விருப்­பத்­துக்கு மாறாக அந்­தக் காணி தரப்­பட்­டுள்­ளது என்­றும், தனது காணியே தனக்­குத் தேவை என்­றும் பாதிக்­கப்­பட்ட பெண் மனித உரிமை ஆணைக்­கு­ழு­வுக்கு எழுத்து மூலம் வழங்­கிய முறைப்பாட்­டில் தெரி­வித்­துள்­ளார்.

இந்­தப் பிரச்­சினை தொடர்­பாக மனித உரி­மை­கள் ஆணைக்­கு­ழு­வில் கட­மை­யில் இருந்த அதி­கா­ரி­யான சட்டத்­த­ரணி லீனஸ் வசந்­த­ரா­ஜா­வி­டம் கேட்­ட­போது

முறைப்­பாட்­டா­ள­ரான பெண் இந்­தி­யா­வில் இருந்து நாடு திரும்­பி­ய­வர் என்ற ரீதி­யில் நாம் ஆழ­மான கரி­சனை கொண்­டுள்­ளோம்.

பிர­தேச செய­ல­கமே இந்த விட­யத்­தில் சரி­யான முடிவை வழங்க வேண்­டும். பௌத்த விகாரை அமைந்­துள்ள 7 ஏக்­கர் காணி 2010ஆம் ஆண்­ட­ள­வில் வவு­னியா வடக்­குப் பிர­தேச செய­ல­கத்­தால் பௌத்த விகாரை அமைக்க வழங்­கப்­பட்­டுள்­ளது.

ஆனால் அதற்­கு­ரிய உரி­மைப் பத்­தி­ரங்­கள் வழங்­கப்­ப­ட­வில்லை. 2010 ஆம் ஆண்­ட­ள­வில் மீள்­கு­டி­ய­மர்­வு­கள் ஆரம்­பிக்­கப்­பட்­டி­ருந்த நிலை­யில் காணி­யின் உரித்­துத் தொடர்­பாக முறை­யாக ஆரா­யாது பிர­தேச செயலகத்­தால் விகாரை அமைக்­கக் காணி வழங்­கப்­ப­ட­டுள்­ளது.

இந்த விட­யத்­தில் காணியை உரிமை கோரும் பெண்­ணின் சம்­ம­தத்­து­டன், அவர் விரும்­பும் தீர்வை வழங்குவதற்­குப் பிர­தேச செய­ல­கம் முன்­வர வேண்­டும். – என்­றார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.