பேய்களின் காதலுக்கு உதவும் யோகி பாபு!!

லாரன்சின் உதவியாளர் மில்கா எஸ்.செல்வகுமார் தற்போது நட்ராஜ், மனீஷா, யோகி பாபு நடிப்பில் சண்டிமுனி படத்தை இயக்கி வருகிறார். இவர் இயக்கும் அடுத்த படத்திற்கு ’பியார்’ என்று பெயரிட்டுள்ளார். திகில் நிறைந்த கதைக்களமாக உருவாகி வரும் இந்த படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சாம்ஸ், ஆர்த்தி, வாசுவிக்ரம், ‌ஷபிபாபு நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு ஆனந்த குமார் ஒளிப்பதிவு செய்ய ரிஷால் சாய் இசை அமைக்கிறார்.  படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம். ‘வழக்கமாக ஒரு ஹீரோ காதலர்களைத்தான் சேர்த்து வைப்பார்கள். இந்த படத்தில் வித்தியாசமாக ஹீரோ யோகி பாபு இரண்டு பேய் காதலர்களை சேர்த்து வைக்கிறார். அதாவது பேயை பேயுடன் சேர்த்து வைப்பது தான் இதன் கதை. பேய்க் காதல் என்றும் சொல்லலாம்.  ஜூலை மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கி ஊட்டி குன்னூர் பழனி போன்ற இடங்களில் படப்பிடிப்பு 

No comments

Powered by Blogger.