புத்தாண்டுடன் இருதரப்பு உறவுகள் மேலும் வலுவடையும்!!

சிங்கள புத்தாண்டை கொண்டாடும் இலங்கை மக்களுக்கு சீனா அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவிப்பதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் ஷென் ஷ்வேங் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான சீனத் தூதுவர் ஷென் ஷ்வேங் வௌியிட்டுள்ள தமிழ் - சிங்கள புத்தாண்டு வாழ்த்து செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அத்துடன் அரசாங்கத்துடன் தொடர்ந்தும் ஒத்துழைப்புடன் செயற்படுவதாக சீனா உறுதியளித்துள்ளது. பல்வேறு துறைகளிலும் இருதரப்பு உறவுகள் வலுவடைந்திருப்பதாக சீனத் தூதுவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் வெற்றிக்குத் தேவையான உதவிகளை வழங்க சீன என்றும் முன்னிற்கிறது. புத்தாண்டுடன் இருதரப்பு உறவுகள் மேலும் வலுவடையும் என இலங்கைக்கான சீனத் தூதுவர் ஷென் ஷ்வேங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.