மட்டக்களப்பில் தமிழ் பாரம்பரிய தமிழ்மொழி விழா!!(படங்கள்)

மட்டக்களப்பு கல்வி வலயத்தின் மண்முனை வடக்கு கோட்ட தமிழ் மொழித்தினம் இன்று (சனிக்கிழமை) மட்டக்களப்பில் நடைபெற்றது.


மட்டக்களப்பு, கல்லடி, உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியில் மண்முனை வடக்கு கோட்ட கல்வி பணிப்பாளர் கே.ரகுகரன் தலைமையில் இந்த தமிழ்மொழி தினப் போட்டி நிகழ்வுகள் நடைபெற்றன.

மட்டக்களப்பு கல்வி வலயக்கல்வி பணிப்பாளர் கே.மயில்வாகனம் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் பிரதிக் கல்விப் பணிப்பாளர் சுஜாத்தா குலேந்திரகுமார் உட்பட பலர் இவ்வாழாவில் கலந்துகொண்டனர்.

மாணவர்கள் மத்தியில் உள்ள திறன்களை வெளிக்கொணரும் வகையிலும் தமிழ் பாரம்பரியங்கள் அதன் அடையாளங்களை எதிர்கால சமூகத்திற்கு கொண்டுசெல்லும் வகையிலும் தமிழ் மொழித்தின போட்டி நிகழ்வுகள் மாணவர்கள் மத்தியில் நடத்தப்பட்டுவருகின்றன.

இந்நிகழ்வில் மண்முனை வடக்கு கோட்ட கல்வி பிரிவுக்குட்பட்ட சுமார் 38 பாடசாலைகளில் உள்ள மாணவர்களின் 60இற்கும் மேற்பட்ட போட்டி நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்த நிகழ்வின்போது தமிழ் கலை கலாசார வளர்ச்சிக்கு பங்காற்றியதற்காக முன்னாள் வட. கிழக்கு மாகாண கலாசார பணிப்பாளர் எதிர்மன்னசிங்கம் வலய கல்வி அலுவலகத்தினால் பாராட்டி கௌரவிக்கப்பட்டார். அத்துடன் நடைபெற்ற எழுத்தாக்கப் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.

தமிழர்களின் கலை கலாசாரத்தினை எதிர்கால சமூகத்திற்கு வழங்கவேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளதாக இங்கு உரையாற்றிய வலயப் கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.