இரகசிய அறிக்கை கையளிக்கப்படும்-சித்திரவதைக்கு எதிரான ஐ.நா. உபகுழு!!

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள சித்திரவதைக்கு எதிரான ஐ.நா. உபகுழு இலங்கை அரசாங்கத்துக்கு இரகசிய அறிக்கை ஒன்றை கைளிக்கவுள்ளது.


அத்தோடு குறித்த உபகுழு இராணுவ மற்றும் தடுப்பு முகாம்களிலும் ஆய்வுகளை மேற்கொண்டதாக குழுவின் தலைவர் விக்டர் சகாரியா தெரிவித்துள்ளார்.

சித்திரவதைக்கு எதிரான ஐ.நா. உபகுழுவின் பிரதிநிதிகள் நால்வர்  கடந்த 2ஆம் திகதி இலங்கைக்கு விஜயமொன்றினை மேற்கொண்டனர். நேற்றுடன் (வெள்ளிக்கிழமை) இந்தக் குழுவினரின் இலங்கை பயணம் நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில் இலங்கைக்கான இந்த பயணம் தொடர்பாக இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே குறித்த குழுவின் தலைவர் விக்டர் சகாரியா இதனை தெரிவித்துள்ளார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், “இந்தப் பயணத்தின்போது எமக்கு நல்ல ஒத்துழைப்பு வழங்கப்பட்டது. தடுப்பு நிலையங்கள் அனைத்திற்கும் செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட எல்லா தகவல்களையும் பெறுவதற்கும் இரகசியமாக நேர்காணல்களை நடத்தவும் அனுமதிக்கப்பட்டது.

சித்திரவதைக்கு எதிரான பிரகடனத்துக்கு ஏற்ப ஒரு தேசிய தடுப்பு பொறிமுறையை உருவாக்குவதில், இலங்கை சாதகமான நிலையில் உள்ளது. இரகசியத்தன்மை, பாரபட்சமின்மை, சார்பற்ற தன்மை, உலகளாவிய தன்மை மற்றும் ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் எமது பணி வழிநடத்தப்படுகிறது.

எமது குழுவினர் இலங்கையில் பொலிஸ் நிலையங்கள், சிறைச்சாலைகள், விளக்கமறியல் சிறைச்சாலைகள், இராணுவ முகாம்கள், புனர்வாழ்வு முகாம்கள், மனநல அமைப்பு, சிறார் புனர்வாழ்வு நிலையம் ஆகியவற்றுக்குச் சென்று பார்வையிட்டதுடன் அரசாங்கப் பிரதிநிதிகள், மனித உரிமைகள் ஆணைக்குழு, சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடினோம்.

இதனையடுத்து, எமது உப குழு இந்தப் பயணத்தின் கண்டறிவுகள் தொடர்பாக இலங்கை அரசாங்கத்துக்கு இரகசிய அறிக்கை ஒன்றை அளிக்கும். அதில் எமது அவதானிப்புகள் மற்றும் பரிந்துரைகளைக் குறிப்பிடுவோம்.

இந்த அறிக்கையை அரச தரப்புகள் பகிரங்கப்படுத்துவதையும், ஐ.நா உபகுழு ஊக்குவிக்கும்” என்று தெரிவித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #ColomboNo comments

Powered by Blogger.