முகத்தை ஜொலிக்க வைக்கும் எளிய வைத்தியங்கள்!


கோடை  வந்துவிட்டாலே அதிகப்படியான வெயிலினால் முகத்தில் வறட்சி ஏற்படுவது இயல்பான ஒன்று.
அன்றாடம் ஏற்படும் டேனிங்கை வீட்டிலேயே சரி செய்ய முடியும். என்றபடி எளிமையான டிப்ஸ்களை வழங்குகிறார் சென்னையைச் சேர்ந்த அழகுக்கலை நிபுணர் வசுந்தரா தேவி.

முல்தானிமெட்டி - 2 டீஸ்பூன், தேன் - ஒரு டீஸ்பூன், பட்டை - அரை டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 8 சொட்டு.

இவற்றைச் சுத்தமான பவுல் ஒன்றில் ஒன்றாகக் கலந்து முகத்தில் பேக் போட்டுக்கொள்ளவும். 20 நிமிடத்திற்குப் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ கருமை நீங்கி முகம் பிரகாசமாய் இருக்கும்.

கடலை மாவு - ரெண்டு டீஸ்பூன், தேன் - ஒரு டீஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் - ஒரு சிட்டிகை, க்ளசரீன் - சில சொட்டு, தயிர் - ஒரு டீஸ்பூன், பால் - ஒரு டீஸ்பூன். சுத்தமான காட்டன் துணியை பாலில் நனைத்து முகத்தை ஒரு முறை சுத்தம் செய்து கொள்ளவும். பின் பேக்கிற்காக மேலே கொடுத்துள்ள எல்லாப் பொருள்களையும் ஒன்றாகக் கலந்து முகத்தில் பேக்காக அப்ளை செய்து பத்து நிமிடம் கழித்து முகத்தைக் கழுவ முகம் டால் அடிக்கும்.

கற்றாழையின் சதைப்பகுதி - 2 டீஸ்பூன், ரெட் ஒயின் - 2 டீஸ்பூன் இரண்டையும் ஒன்றாக மிக்ஸ் செய்தால் ஜெல்லி பதம் கிடைக்கும். அதை முகத்தை அப்ளை செய்து 10 நிமிடத்திற்குப் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ இறந்த செல்கள் உதிர்ந்து முகம் பளிச்சென்று இருக்கும்.

புதினாச் சாறு - 2 டீஸ்பூன்.கஸ்தூரி மஞ்சள் - 2 டீஸ்பூன், அரிசி மாவு - 4 டீஸ்பூன் எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து முகத்தில் பேக் போட்டு 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவ முகம் ஃப்ரெஷாக இருக்கும்.

ஒரு கப் தண்ணீரை நன்றாகச் சூடுபடுத்திக்கொள்ளவும். இந்த தண்ணீரில் ஒரு கைப்பிடி அளவு வெட்டிவேர், ஒரு கைப்பிடி அளவு ரோஜா இதழ் சேர்த்து முடிவைத்துவிடவும். ஒரு மணிநேரத்தில் வெட்டிவேர் மற்றும் ரோஜாவின் எசன்ஸ்கள் தண்ணீரில் நன்றாக இறங்கியிருக்கும். இந்தத் தண்ணீரை வடிகட்டி சுத்தமான பஞ்சில் நனைத்து முகத்தைத் துடைக்க சருமத்தின் அடியில் சேர்ந்து இருக்கும் அழுக்குகள் நீங்கி சருமம் அழகால் மிளிரும்.

காய்ச்சாத பால் - ஒரு கப், ரோஜா இதழ் - ஒரு கைப்பிடி அளவு, தேன் - 2 டீஸ்பூன்.ரோஜா இதழ்களைப் பாலில் சேர்த்து நன்கு கசக்கிவிடவும். ரோஜாவின் எசன்ஸ் பாலில் இறங்கி நிறம் மாறியதும் அத்துடன் தேன் கலந்து முகத்தில் அப்ளை செய்து அரைமணிநேரம் கழித்து முகத்தைக் கழுவ முகம் டால் அடிப்பது உறுதி.

முகத்தில் எண்ணெய் வழிந்து ஸ்கின் டல்லாக இருக்கிறது என்பவர்கள் ஸ்ட்ராபெர்ரி பழம் - 4, எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன், தயிர்- 2 டீஸ்பூன், தேன் - ஒரு டீஸ்பூன் இவற்றை ஒன்றாக் கலந்து முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடம் கழித்து முகத்தைச் சுத்தப்படுத்த முகம் ப்ரெஷாக இருப்பதுடன் பிரகாசமாய் மின்னும்.

பேக் போட நேரம் இல்லையென நினைப்பவர்கள் வெயிலில் போய் வந்தவுடன் பால் - 4 டீஸ்பூன்,தேன் - ஒரு டீஸ்பூன், எலுமிச்சை சாறு ஒரு டீஸ்பூன் கலந்து சுத்தமான பஞ்சால் முகத்தைத் துடைத்து எடுக்க அழுக்குகள், இறந்த செல்கள் உடனடியாக நீங்கும்.

வியர்க்குரு அதிகம் உள்ளது எனில், சுத்தமான  சந்தன பேஸ்ட் - ஒரு டீஸ்பூன் எடுத்து அதனுடன் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் பேக் போட்டுக்கொள்ளலாம். வியர்க்குருக்கு மட்டுமல்லாமல் வெயிலினால் ஏற்படும் சரும பிரச்சனைகளும் நீங்கும்.

அன்றாடம் பேஸ் பேக் போட முடியாது என்பவர்கள்... தக்காளி விழுது - ஒரு டீஸ்பூன், தயிர் - ஒரு டீஸ்பூன், முல்தானிமெட்டி - 2 டீஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் - கால் டீஸ்பூன் நான்கையும் ஒன்றாகக் கலந்து முகத்தில் அப்ளை செய்து கால் மணி நேரம் கழித்து முகத்தைக் கழுவ வெயிலினால் கறுத்த உங்கள் முகம் தகதகவென மின்னும்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.