வெற்றிக்குப் பின்னர் கோலி!!

                                          Photo Courtesy: iplt20.com

மைதானத்தை விட்டு விரைவில் வெளியேற மனம் இடம் கொடுக்கவில்லை’ என நேற்றைய போட்டிக்கு பின்னர் கோலி பேசினார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ந்து 6 தோல்விக்குப் பிறகு கிடைத்த முதல் வெற்றி. விமர்சனங்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்தது போல அட்டகாசமான வெற்றி. கண்டிப்பாகக் கோலி மற்றும் அவரது அணியினருக்கு புது உத்வேகத்தை கொடுத்திருக்கும். ஐபிஎல் தொடரின் 28வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளும் நேற்று விளையாடின.

 மொஹாலியில் நடைபெற்ற இந்தப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் விராட்கோலி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி பஞ்சாப் வீரர்கள் கெய்ல் மற்றும் கே.எல்.ராகுல் களமிறங்கினர். உமேஷ் யாதவ் வீசிய முதல் ஓவரிலே கெய்ல் அவுட்டாகி வெளியேற வேண்டியது. உமேஷ் யாதவ் முதல் ஓவரின் 5வது பந்தில் எல்.பி.டபிள்யூ அப்பில் செய்தார். ஆனால் அம்பயர் அவுட் கொடுக்க மறுத்துவிட்டார். பெங்களூரு அணி இதனை எதிர்த்து அப்பீல் செய்யவில்லை. அதன்பின்னர் காட்டப்பட்ட ரீப்ளேவில் பந்து ஸ்டெம்பை தாக்கியது தெரியவந்தது. இந்த கண்டத்தில் இருந்து தப்பிய கெய்ல் விக்கெட் இழக்காமல் 99 ரன்களை குவித்தார்.  20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட்  இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து பார்த்தீவ் பட்டேல், விராட் கோலி பெங்களூருவின் இன்னிங்ஸை தொடங்கினர். 4 பவுண்டரிகளை விளாசிய பார்த்திவ் பட்டேல் 19 ரன்களில் பெவிலியன் திரும்பினர். இதனையடுத்து டி-வில்லியர்ஸ் களமிறங்கினார். 4வது ஓவரிலே டிவில்லியர்ஸ் களமிறங்கியதால் பெங்களூரு ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர். கோலி - டிவில்லியர்ஸ் இருவரும் நிதானமாக விளையாடினார். பந்துவீச்சாளர்கள் செய்யும் தவறுகளை தனக்கு சாதகமாக்கிக்கொண்டனர். 11-வது ஒவரில் கோலி தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். 16வது ஓவரில் ஷமியின் பந்துவீச்சில் கோலி அவுட்டானார். இதன்பின்னர் ஸ்டொய்னஸ் களமிறங்கினார். இவர்கள் இருவரும் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துசென்றனர். 19.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்து பெங்களூரு அணி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

போட்டிக்குப் பின்னர் பேசிய கோலி, “ இது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். மைதானத்தை விட்டு விரைவில் வெளியேற மனம் இடம் கொடுக்கவில்லை. கோடுகளைத் தாண்டும் போது அற்புதமான உணர்வாக இருந்தது. நிறையப்போட்டிகளில் எங்களுக்கு அதிர்ஷ்டம் இல்லாமல் இருந்தது. அனைத்து போட்டிகளும் எங்களுக்குத்  துரதிருஷ்டமாக இருந்தது என கூற மாட்டேன்.  நிறையப்போட்டிகளில் வெற்றிக்கு அருகே சென்று பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளது. இந்தப்போட்டியில் 190 ரன்கள் அடிப்பார்கள் என நினைத்தோம். ஆனால் 170 ரன்களில் அவர்களைக் கட்டுப்படுத்தியது சிறப்பான விஷயம். 8 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றியது அற்புதமான விஷயம். கெய்ல் நீண்ட நேரம் களத்தில் இருப்பார் எனத் தெரியும். அவருக்குச் சரியாக பந்துவீச்சினால் அவரைக் கட்டுப்படுத்த முடியும் என நம்பினோம்” என்றார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


No comments

Powered by Blogger.