லாரன்ஸிடம் வருத்தம் தெரிவித்த சீமான்!!

நடிகரும் சமூக ஆர்வலருமான நடிகர் ராகவா லாரன்ஸ் தன்னுடைய முகநூல் பக்கத்தில் `வளர்ந்து வருகிற ஓர் அரசியல் தலைவருக்கும் அவரது தொண்டர்களுக்கும் ஒரு வேண்டுகோள் மற்றும் எச்சரிக்கை!
என்கிற தலைப்பில் நீண்ட கருத்தைப் பதிவிட்டிருந்தார். அதில் கட்சியின் பெயரை அவர் குறிப்பிடவில்லை எனினும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் அவரது தொண்டர்களுக்கும்தான் லாரன்ஸ் எழுதியிருந்தார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

நாம் தமிழர் கட்சியினர் தன்னைத் தொடர்ந்து அவதூறாகப் பேசிவருவதாகவும் அதற்கெல்லாம் காரணம் முதன்முதலில் நீங்கள் என்னை மேடையில் விமர்சித்ததுதான் ஆரம்பம் என சீமானை நோக்கிக் கேட்கும் விதமாக எழுதியிருந்தார். 

``இதை பிரச்னையாகத்தான் நானும் எனது தொண்டர்களும் அணுகுவோம்"* என நீங்கள் முடிவெடுத்தால்....
அதற்கும் நான் தயார்!

*"சமாதானமா?*

*"சவாலா?"*

முடிவை நீங்களே எடுங்கள்!

எனத் தன் கருத்தை முடித்திருந்தார்.

இன்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் இதுகுறித்து பத்திரிகையாளர்கள் கேட்டனர். அதற்கு சீமான்
``லாரன்ஸ் மீது எனக்கு எப்போதும் வருத்தமில்லை. மதிப்புதான். அவர் மாற்றுத்திறனாளிப் பிள்ளைகளைப் படிக்க வைக்கிறாரு. உதவுறாரு. அவர் சேவை குணம் மீது எனக்கு மதிப்பு இருக்கு. யாராவது ரெண்டுபேர் புரிதலில்லாமல் விமர்சித்து இருக்கலாம். அப்படி இருந்தா அது தப்பு. அது யாருன்னு கண்டுபுடிச்சு நடவடிக்கை எடுக்கலாம். ஏன்னா, லாரன்ஸ் தம்பிய ஒரு எதிரியா பார்க்க வேண்டிய தேவையே நமக்கு இல்லை. யாராவது ஒருவர் நம்ம பேர்ல போட்டுவிட்டுட்டு வம்பு இழுப்பாங்க. போலியான முகநூல் பக்கங்களை வெச்சுகிட்டு நான் பேட்டி கொடுக்காமலேயே, நா கொடுத்ததால்லாம் போடுவாங்க. அந்தமாதிரி வேலைகள் நடக்க வாய்ப்பிருக்கு. அப்படி செஞ்சிருந்தா அது தவறு. அதுக்கா நான் தம்பி லாரன்ஸ்கிட்ட என் வருத்தத்தை தெரிவிச்சுக்கிறேன்" என்றார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #ColomboNo comments

Powered by Blogger.