வடக்கில் சட்டவிரோத மீன்பிடி அதிகரித்துள்ளதாக மக்கள் விசனம் தெரிவிப்பு!!

மன்னார் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மீன்பிடி தொழிலில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
மன்னார் மாவட்டத்தின் பெரும்பாலான மக்கள் மீன்பிடி மற்றும் கடற்தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். அதேநேரத்தில் இலங்கையின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு தேவையான மீன் மற்றும் கடல் உணவு பொருட்கள் மன்னார் மாவட்டத்திலிருந்தே ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

அதேபோன்று தீவகத்திற்கு அப்பால் உள்ள வங்காலை தொடக்கம் சிலாவத்துறை முள்ளிகுளம் வரையிலும் விடத்தல் தீவு தேவன்பிட்டி வெள்ளாங்குளம் பகுதி வரையிலும் உள்ள கரையோரப்பகுதிகளிலும் பெரும்பாலும் மக்கள் மீன்பிடியையே வாழ்வாதாரமாகக்கொண்டுள்ளனர்.

இந்தநிலையில் கடந்த சில வருடங்களாக கடல் வளங்களை பாதிக்கின்ற வகையிலும் மீன்வளங்களை குறைக்கின்ற வகையில் சட்டவிரோதமாக மீன்பிடி தொழிலில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக சுருக்குவளை, டைனமோட், தங்கூசி வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுதல், சட்டவிரோதமாக சங்கு அகழ்வுகளில் ஈடுபடல், கட்டுவலை நிபந்தனைகளை மீறி மீன்பிடித்தல், டோலர் படகுகளை பயன்படுத்தி மீன்பிடித்தல் போன்ற பல்வேறு விதமான நடவடிக்கைகள் மன்னார் கடல் பகுதிகளில் இடம்பெற்று வருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 2015 மற்றும் 2016, 2017ஆம் ஆண்டுகளில் மன்னார் கடல் எல்லை பகுதிக்குள் சட்டவிரோதமாக டைனமோட் வெடிபொருட்களை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ள போதிலும் தற்போதும் சட்டவிரோதமாக மீன்பிடிக்கும் செயற்பாடு இடம்பெறுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான தொழில்கள் குறிப்பிட்ட காலப்பகுதியில் பெருமளவான வருமானத்தை கொடுத்தாலும் எதிர்கால சந்ததிகளுக்கு தேவையான ஒட்டுமொத்த மீன்வளங்களையும் அழித்துவிடக்கூடிய மிகப்பாதகமான செயல் என சமூக ஆர்வளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அதேநேரத்தில் இந்திய மீனவர்களின் வருகையை எவ்வாறு எதிர்க்கின்றோமோ அதே காரணங்களுக்காக இவ்வாறான சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளையும் எதிர்க்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கைவிடுக்கின்றனர்.

மேலும் இவ்வாறான சட்டவிரோத மீன்பிடி தொழிலுக்கு சில அரசியல்வாதிகள் ஆதரவு வழங்குவதுடன் சில தொழில்களுக்கு அனுமதியும் பெற்றுக்கொடுக்கின்றனர் என்றும் அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இவ்வாறான தொழில்களில் ஈடுபடுபவர்கள் எதிர்கால சந்ததியினரை கருத்திற்கொண்டு சூழலுக்கும் வளங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தாத மாற்றுவழி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.