நடைபயணத்திற்கு அழைப்புவிடுக்கிறார் சிவாஜிலிங்கம்!!

பாதிக்கப்பட்ட மக்களுக்கான தீர்வை வழங்காத இலங்கை அரசாங்கத் தரப்பினரை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்வரும், 26ஆம் திகதி பாரிய நடைபயணமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.


திருகோணமலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

போர்க்குற்றங்களுக்கான விசாரணைகளில் நீதி கிடைக்க வேண்டும், இலங்கை அரசாங்கம் தனது பொறுப்புக்கூறலை வெளிப்படுத்த வேண்டும் இவற்றினூடாகவே இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதை வலியுறுத்தியே இந்த நடைபயணம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

வெறுகல் பகுதியிலிருந்து முள்ளிவாய்க்கால்வரையான 175 கிலோ மீற்றர் தூரம்கொண்ட இந்த நீதிக்கோரிய நடைபயணத்துக்கு, பாதிக்கப்பட்ட உறவுகள், காணாமலாக்கப்பட்ட உறவுகள் மற்றும் சிவில் அமைப்பினர் ஆகியோர் ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.