ஹட்டன் நோக்கி பயணித்த வான் விபத்து!!

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் ஹட்டன் நோக்கி பயணித்த வான் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பெண்கள் உட்பட 9பேர் காயமடைந்துள்ளனர்.


இந்த விபத்து இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 5.45 மணியளவில் நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காலி பகுதியிலிருந்து ஹட்டனை நோக்கிச் சென்ற வானே சுமார் 10 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த வானில் 9 பேர் பயணித்துள்ள நிலையில், 9 பேரும் காயங்களுக்குள்ளாகி வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பின்னர் அதில் நான்கு பேர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

காலி பிரதேசத்தில் மரண வீடொன்றிற்குச் சென்று மீண்டும் ஹட்டன் நோக்கி பயணித்தபோதே இந்த விபத்து சம்பவித்துள்ளது. வானில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.