சீரியல், சினிமா... கிளாமர்!! மனம் திறக்கும் வாணி போஜன்!!

விஜய் தேவரகொண்டாவுக்கு தெலுங்கு தெரியாத பொண்ணு நடிக்கிறது சரியா வருமானு சின்னதா சந்தேகம் இருந்திருக்கு. ஆனா, நான் முயற்சி பண்ணி தெலுங்கு பேசி நடிக்கிறேன்னு தெரிஞ்சு ஹாப்பி ஆகிட்டார். 

சீரியல், சினிமா... கிளாமர் பாலிசி என்ன?! - வாணி போஜன்
சின்னத்திரை டு சினிமா என்ட்ரி கொடுக்கும் பிரபலங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. லேட்டஸ்ட் என்ட்ரியாக `தெய்வமகள்' வாணி போஜன் சினிமாவில் களமிறங்கியிருக்கிறார். தமிழில் வைபவ்வுடன் ஒரு படம், தெலுங்கில் விஜய் தேவரகொண்டா தயாரிப்பில் தருண் பாஸ்கர் ஜோடியாக ஒரு படம்... என ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் வாணி போஜனிடம் பேசினேன். 

சீரியல் டூ சினிமா என்ட்ரி எப்படி? 
சீரியலுக்கு வர்றதுக்கு முன்னாடி மாடலிங் பண்ணிக்கிட்டிருந்தேன். அப்போவே சினிமா வாய்ப்புகள் வந்தன. அப்போதைக்கு தவிர்த்தேன். பிறகு பண்ணதுதான், `தெய்வமகள்' சீரியல். கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் அந்த சீரியல் வெற்றிகரமா ஒளிபரப்பானதோடு, எனக்கும் நல்ல பெயர் கிடைச்சது. ஒரு வருடம் பிரேக் எடுத்துக்கிட்டு பாரீஸ், சிங்கப்பூர், ஶ்ரீலங்கானு டூர் போயிட்டு வந்தேன். அந்த கேப்லயே சீரியல் சினிமா ரெண்டு ஃபீல்டுல இருந்தும் நடிக்கக் கேட்டாங்க. சீரியலா, சினிமாவாங்கிற குழப்பம் இருக்க, ஒருவழியா சினிமாவுக்கு டிக் அடிச்சுட்டேன். என்கிட்ட கதை சொன்னவங்க ரொம்ப டீசன்ட்டான கதைகளோடு வர்றாங்க. நல்ல டீமா இருக்காங்க. அவங்கன்னு இல்ல, பொதுவாவே இப்போ சினிமா மாறியிருக்கு. கதைக்கும், கேரக்டருக்கும் நிறைய மெனக்கெடுறாங்க. அதனால, சந்தோஷமா சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்துட்டேன். நடிகர் நிதின் சத்யா, வைபவ் ஹீரோவா நடிக்கும் படத்தைத் தயாரிக்கிறார். அதுல ஹீரோயினா நடிக்கிறேன். ஈஸ்வரி ராவ் மேடம் இந்தப் படத்துல போலீஸா வர்றாங்க. இதுதவிர, இன்னும் மூணு தமிழ்ப் படத்துல கமிட் ஆகியிருக்கேன். அதிகாரபூர்வ அறிவிப்பு சீக்கிரமா வரும்.


விஜய் தேவரகொண்டா தயாரிக்கும் முதல் படத்தின் ஹீரோயின் நீங்க... இந்த வாய்ப்பு எப்படி வந்தது?"
படத்தின் இயக்குநர் சமீர் என் போட்டோஸ், விளம்பரப் படங்களைப் பார்த்திருக்கார். என்கிட்ட கதை சொன்னார், எனக்கும் பிடிச்சிருந்தது... கமிட் ஆகிட்டேன். தெலுங்கு எனக்கு அறைகுறையாதான் தெரியும். இதை டைரக்டர்கிட்ட சொன்னேன், `பரவாயில்ல பார்த்துக்கலாம்'னு சொல்லிட்டார். பாதி ஷூட்டிங் முடிஞ்சிருக்கு. இன்னும் 12 நாள் ஷூட் போகணும். படத்துக்கு இன்னும் டைட்டில் முடிவு பண்ணல." 

தயாரிப்பாளர் விஜய் தேவரகொண்டாவைச் சந்திச்சீங்களா?
அவரை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சது. ஆனா, நான் போறதுக்குள்ள அவர் கிளம்பிட்டார். அதனால, சந்திக்க முடியாம போயிடுச்சு. தவிர, அவரும் என் போட்டோஸ் பார்த்துட்டுதான் என்னைக் கமிட் பண்ணியிருக்கார். விஜய் தேவரகொண்டாவுக்கு தெலுங்கு தெரியாத பொண்ணு நடிக்கிறது சரியா வருமானு சின்னதா சந்தேகம் இருந்திருக்கு. ஆனா, நான் முயற்சி பண்ணி தெலுங்கு பேசி நடிக்கிறேன்னு தெரிஞ்சு ஹாப்பி ஆகிட்டார். தவிர, நான் தெலுங்கு பேசுறதைக் கேட்டு இயக்குநர், 'நீங்களே டப்பிங் பேசுங்க'ன்னும் சொல்லிட்டார். நானும் சந்தோஷமா ஓகே சொல்லிட்டேன். எந்த மொழிப் படத்துல நடிக்கிறோம்னு முக்கியமில்லை; எப்படி நடிக்கிறோம்ங்கிறதுதான் முக்கியம்." 

கிளாமர் ரோல்ல நடிப்பீங்களா?
சீரியலோ, சினிமாவோ... கிளாமருக்கு முக்கியத்துவம் தர தேவையில்லை. பசங்களுக்கும் ஹோம்லி பொண்ணுங்களைத்தான் பிடிக்கும். படத்துக்குத் தேவைன்னா பண்ணலாம்; இல்லைனா தேவையில்லை. தவிர, கிளாமர்ங்கிற விஷயம் நம்ம உடம்புலதான் இருக்கணும்னு இல்லை. நம்ம முகத்துல, சிரிப்புல இருந்தா போதும். 

ஃபிட்னெஸ் சீக்ரெட்?
கடந்த  ஐந்து வருடமா ரெகுலரா யோகா பண்றேன். தினமும் ஒரு மணிநேரம் அதுக்காகச் செலவழிப்பேன். மத்தபடி, ஜிம்ல வொர்க் அவுட் பண்ற பழக்கமில்லை. எனக்கு டான்ஸ் தெரியும்." என்று முடிக்கிறார், வாணி போஜன்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.