இந்திய பெண்ணொருவர் இலங்கை குண்டுத் தாக்குதலில் உயிரிழப்பு!!

இலங்கையில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்த இந்திய பெண்ணின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் தற்போது வெளியாகியுள்ளது.


இலங்கை இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களினால் 290க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்தனர். இதில் பல வெளிநாட்டவர்களும் உள்ளடங்கப்படுவதாக இலங்கை பொலிஸ் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது.

இந்நிலையில் குறித்த குண்டு வெடிப்புச் சம்பவத்தில் இந்தியா, கேரளாவைச் சேர்ந்த Razeena Kukkady (58 வயது) என்ற பெண் உயிரிழந்துள்ளார்.

இவர் தனது கணவரை டுபாய்க்கு அனுப்புவதற்காக இலங்கைக்கு வந்து, சிங்கரில்லா ஹோட்டலில் தங்கியிருந்தபோதே குறித்த குண்டு வெடிப்புச் சம்பவத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் அவரின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.