கொலம்பியாவில் மண்சரிவு !!

கொலம்பியாவின் தென்மேற்கு மாகாணமான கவுகாவில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ளனர்.


அங்கு தொடரும் அடை மழையால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக அந்நாட்டு அனர்த்த நிவாரண நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் மண்சரிவில் சிக்கி 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 8 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் வீதிகள் மூடப்பட்டதாகவும் அந்த நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலைப்பாங்கான பகுதிகளை கொண்ட கொலம்பியாவில் மழை காலத்தில் அதிகளவான வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்கள் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.