தமிழர்களின் பாதுகாப்புக்கு தமிழ் இளைஞர்களைக் கொண்ட ஊர்காவற்படை!!
இன்றைய சூழ்நிலையில் தமிழர் பகுதிகளை பாதுகாக்க தமிழ் இளைஞர்களைக் கொண்ட ஊர்காவல் படையினை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மட்டக்களப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நகர் உட்பட பல பகுதிகளிலும் பாடசாலைகள் மற்றும் மதத்தலங்கள் உட்பட கிராமங்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காக பொதுமக்களின் பங்களிப்பனை பெற்றுக்கொள்வது தொடர்பான விசேட கூட்டம் நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பு – மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எம். தயாபரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இதன்போது ஆலயங்கள் மற்றும் பாடசாலைகளில் குழுக்களை அமைத்து பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுவது என தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன் தமிழ் எல்லைப்பகுதிகளின் பாதுகாப்பினை பலப்படுத்தும் வகையில் ஊர்காவல் படைப்பிரிவினை அமைக்க நடவடிக்கையெடுக்குமாறும் இங்கு கோரிக்கை விடுக்கப்பட்டன.
கடந்த யுத்த காலத்தில் முஸ்லிம் பிரதேசங்களை பாதுகாக்க ஊர்காவல் படை அமைக்கப்பட்டு பாதுகாப்பு வழங்கப்பட்டது போல தமிழ் பிரதேசங்களை பாதுகாக்க தமிழ் இளைஞர்களைக் கொண்டு ஊர்காவல் படை அமைக்கப்படவேண்டும் என பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் இங்கு வேண்டுகோள் விடுத்தனர்.
தமது பாதுகாப்பினை கருத்தில்கொண்டு தமிழ் இளைஞர்களை ஊர்காவல் படையில் இணைத்து பாதுகாப்பினை வழங்க அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் என இங்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இது தொடர்பான அறிக்கை அரசாங்கத்திற்கு அனுப்பிவைக்கப்படும் என மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரதேச செயலாளர் எம்.தயாபரன் தெரிவித்தார்.
இனங்களிடையே விரிசல்களை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை தவிர்த்து தங்களை பாதுகாத்துக்கொள்ளும் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பிரதேச செயலாளரினால் இங்கு அறிவுறுத்தப்பட்டது.
இதன்போது கிராம மட்டத்தில் குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தல் பாதுகாப்பு தரப்பினருக்கு தேவையான உதவிகளை வழங்குவது குறித்தும் தீர்மானிக்கப்பட்டது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை