தௌஹீத் ஜமாத் உடன் அரசாங்கமே நெருங்கிய தொடர்பு–அஸாத் ஸாலி!!

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்புடன் மஹிந்த அரசாங்கமே நெருங்கிய தொடர்பில் இருந்ததாக மேல்மாகாண ஆளுநர் அஸாத் ஸாலி தெரிவித்தார்.


கொழும்பில், இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “இந்தப் பிரச்சினை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, விமல் வீரவன்ஸ, உதயகம்மன்பில போன்றோருக்கு அரசாங்கத்தை வெளியேற்றுவதுதான் பிரதான நோக்கமாக இருந்து வருகிறது.

இன்னும் சில தேரர்களும் இவ்வாறான கருத்துக்களையே கூறிவருகிறார்கள். என்னுடைய செயற்பாடுகள் தொடர்பிலும் விமர்சிக்கிறார்கள். சில ஊடங்களும் இனவாதமாகத்தான் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இதனால், முஸ்லிம் பிரதிநிதிகள் மட்டுமன்றி முஸ்லிம் மக்களும் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.

எம்மை பயங்கரவாதிகளாக சித்தரிக்கவும் முயற்சிகள் நடக்கின்றன. இதுதொடர்பில் நான் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோவுக்கு கடிதமொன்றையும் அனுப்பியிருந்தேன்.

இது அரசாங்கத்தை கவிக்கும் தருணமோ அல்லது ஜனாதிபதியை மாற்றும் தருணமோ அல்ல. நாம் அனைவரும் இன, மத பேதங்கள் கடந்து இலங்கையர் என்ற ரீதியில் நாம் ஒன்றிணைய வேண்டும்.

நாட்டில் இடம்பெற்றுள்ள பயங்கரவாதம் தொடர்பில் நாம் 2005 ஆம் ஆண்டிலிருந்தே நாம் கூறிக்கொண்டுதான் இருக்கிறோம். இதற்கு பிரதானமாக கடந்த அரசாங்கம்தான் பொறுப்புக்கூற வேண்டும். அவர்கள் தான் தேசிய தௌஹீத் ஜமாத்துடன் நெருங்கியத் தொடர்பில் இருந்தார்கள்.

ஐ.நா.வில் கடந்த அரசாங்கத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது, தௌஹீத் ஜமாத் அமைப்பினர்தான் புறக்கோட்டை ரயில் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

தவறை எந்தத் தரப்பினர் இழைத்திருந்தாலும், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் எம்மனைவரதும் வேண்டுகோளாக இருக்கிறது.

கார்தினல் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகையிடமிருந்து நாம் அனைவரும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். இவர் அன்றிலிருந்து இன்றுவரை அமைதியான போக்கையே கடைப்பிடித்து வருகிறார்.

அவரது வாயிலிருந்து வரும் வார்த்தைகள்கூட பாரதூரமானதாக இருந்ததில்லை. இதனையிட்டு நாம் மிகவும் பெருமையடைகிறோம். தேவாலயங்களுக்கு பாதுகாப்பு வழங்கத் தயாராகவுள்ளோம்.

அங்கு முடியாவிட்டால் தேவாலயங்களுக்கு அருகிலுள்ள எமது மதஸ்தலங்களில் கிறிஸ்தவ மக்கள் வழிபாடுகளை மேற்கொள்ளுமாறு நாம் அழைப்பு விடுக்கிறோம்.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ள நாம் தயாராகவே இருக்கிறோம்“ என தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.