நிசான் முன்னாள் தலைவர் நான்காவது முறையாக மீண்டும் கைது!!

நிசான் கார் தயாரிப்பு நிறுவனத்திலிருந்து பதவிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் தலைவர் கார்லோஸ் கோசென் நான்காவது முறையாக மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.


ஓமன் முகவர் ஒருவருக்கு முறையாக கொடுப்பனவுகளை வழங்க தவறிய குற்றச்சாட்டில் இன்று (வியாழக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட ஒருவர் இவ்வாறு மீண்டும் கைது செய்யப்படுவது அசாதாரணமானது என தேசிய ஒளிபரப்பு சேவை தெரிவித்துள்ளது.

டோக்கியோNவில் அவரது இல்லத்திற்கு சென்ற அதிகாரிகள் அவரை விசாரணைக்கு முன்னிலையாகுமாறு அழைப்பு விடுத்துள்ளனர். அதெனை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தன் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான உண்மைகளை வெளிப்படுத்தும் வகையில் எதிர்வரும் 11ஆம் திகதி ஊடக சந்திப்பொன்றை நடத்தவுள்ளதாக கோசென் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். இவ்வாறான நிலையில் கோசென் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐந்தாண்டுகளுக்கு மேலாக தனது சம்பளத்தை குறைவாக காண்பித்ததாகவும், நிறுவனத்தின் சொத்துக்களை தனிப்பட்ட விடயங்களுக்காக பயன்படுத்தியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு கோசென் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.