சமூக வலைத்தள நிர்வாகிகளுக்கு சிறை!- அவுஸ்ரேலியாவில் சட்டமூலம் நிறைவேற்றம்!!

வன்முறையை தூண்டும் உள்ளடக்கங்களை நிறைவேற்ற தவறும் சமூக வலைத்தள நிர்வாகிகளுக்கு சிறைத்தண்டனை வழங்கும் புதிய சட்டமூலம் அவுஸ்ரேலியாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.


அவுஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) இச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இப்புதிய சட்டத்தின்படி நிர்வாகிகளுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படுவதுடன், நிறுவனங்கள் தமது மொத்த வருவாயிலிருந்து 10 சதவீதத்தை அபராதமாக செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.

நியூசிலாந்து கிறிஸ்ட்சேர்ச் மசூதியில் 50 பேரின் உயிரை காவுகொண்ட கொடூர தாக்குதல் ஃபேஸ்புக்கில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டிருந்தது. இத்தாக்குதலின் எதிரொலியாகவே இப்புதிய சட்டமூலம் கொண்டுவரப்பட்டது.

இந்த தாக்குதல் காட்சி சுமார் ஒரு மணிநேரம்வரை ஃபேஸ்புக் வலைத்தளத்தில் உலாவியதுடன், இதனை பலரும் பகிர்ந்தனர்.

இவ்வாறான வன்முறையை தூண்டும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் இவ்வளது நேரம் உலவுவது என்பது ஏற்றுக் கொள்ள முடியாததாகும் என பிரதமர் ஸ்கொட் மொறிசன் விமர்சித்தார்.

கொலை, சித்திரவதை மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்கள் போன்ற காணொளிகள் மற்றும் ஒளிப்படங்களை குறித்த நேரத்திற்குள் நீக்குவதற்கு சமூக வலைத்தளங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்றேல் அது அவுஸ்ரேலியாவில் பாரிய குற்றமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.