சட்டவிரோத தேன் உற்பத்தி நிலையம் முற்றுகை!!

வவுனியாவில் சட்டவிரோதமாக இயங்கி வந்த தேன் உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது.


இதன்போது வெளிமாவட்டங்களுக்கு விற்பனை செய்வதற்கு எடுத்துச்செல்லப்பட தயார் நிலையிலிருந்த 116 சீனி பாணிப் போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக வவுனியா பொது சுகாதார பரிசோதகர் க.தியாகலிங்கம் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பொதுமக்கள் வழங்கிய இரகசியத் தகவலுக்கமைய ஓமந்தை சுகாதார பரிசோதகர், நொச்சிமோட்டை சுகாதாரப்பரிசோதகர் கூட்டாக இணைந்து வவுனியா பொது சுகாதாரப்பரிசோதகதர் தலைமையில் முன்னெடுத்த நடவடிக்கைகளுக்கு அமைய குறித்த தேன் உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது.

இதன்போது சீனிப்பாணியை தேன் என்று தெரிவித்து 116 போத்தல்களில் அடைக்கப்பட்ட சீனிப்பாணி மலையக பகுதிகளில் விற்பனைக்காக எடுத்துச்செல்லப்படவிருந்தமை விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

இதேவேளை சொப்பின் பையில் இட்டு மோட்டார் சைக்கிளில் விற்பனைக்கு எடுத்துச்செல்லப்பட்ட பாண், பனிஸ் கடதாசிப் பையில் வேறு தேவைகளுக்கு பயன்படுத்திய பாண் பெட்டியிலிருந்த உரப்பை என்பனவும் இன்று காலை மரக்காரம்பளை வீதியில் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து சட்டவிரோத தேன் உற்பத்தி நிலைய உரிமையாளருக்கு எதிராகவும் பாண் விற்பனைக்கு எடுத்துச்சென்ற விற்பனையாளருக்கு எதிராகவும் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.